May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ச ம க தலைவர் சரத்குமார்

பட்ஜெட் – 2020 சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார் அறிக்கை

பட்ஜெட் – 2020 குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் அறிக்கையில்
இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்புகள், ஜிடிபி ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
70 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 50 சதவிகிதத்திற்கு மேல் பங்கு வகித்தது. தற்போது 17 – 18% ஆக குறைந்துள்ளது. சீனா, பிரேசில், ரஷ்யா போன்ற வளரும் நாடுகளை போன்று நமது நாட்டு உள்கட்டமைப்பை வலுவாக்கினால் தான், நமது வேளாண் பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த முடியும்.

ச ம க தலைவர் சரத்குமார்

அந்த வகையில், விவசாயத்தினை ஊக்குவிக்கும் விதமாக 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் வேளாண் துறைக்கு கடந்த ஆண்டை விட ரூ.12,955 கோடி அதிகரித்து ரூ.2.83 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்தும், வேளாண் கடனுக்காக ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பால், பழங்கள், காய்கறிகள், பருப்புவகைகள் உள்ளிட்ட பல விவசாயப்பொருட்களை கொண்டு செல்வதற்கு தனி ரயில்கள் இயக்கப்படும் என்றும், கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் அறிமுகம் செய்திருப்பது வேளாண் துறை வளர்ச்சிக்கும் பயன்படும்.
சுற்றுலாத்துறையின் கீழ் தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமையவிருப்பது புதையுண்ட தமிழர் வரலாற்றை மக்கள் அறிய உதவும்.
மேலும், ஜல் ஜீவன் (குடிநீர்) திட்டத்திற்கு ரூ.3.6லட்சம் கோடி, போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1.7லட்சம் கோடி, ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.1.23 லட்சம் கோடி, கல்வித்துறைக்கு ரூ.99,300 கோடி, சுகாதாரத்திற்கு ரூ.69,000 கோடி, . நீர்வளத்திற்கு ரூ.11,500 கோடி, தனி நபர் வருமான வரி குறைப்பு என பல முக்கிய அம்சங்கள் இன்றைய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 % இருந்து 48% குறைந்துள்ளதாக தெரிகிறது. வருங்காலத்தில் கடன் ஜிடிபி மேலும் குறைந்து வருமானம் பெருகிடும் வகையில் இந்த பட்ஜெட் அமைய வேண்டும்.
ESOP (Employee Stock Ownership Plans) பணியாளர் உரிமை நிறுவனங்க ளுக்கு வழங்கப்பட்டிருக்கும் 5 வருட வரி விலக்கு வணிகத்தில் பணியாளர்களின் பங்குகளையும், ஈடுபாட்டையும் அதிகரிக்கும்.
பொதுபட்ஜெட்டில் சேர்ந்த பிறகு இரயில்வே துறைக்கான திட்டங்களில் வெளிப்படை தன்மை குறைவால், எங்கள் இயக்கம் பலமுறை வலியுறுத்தியபடி, இரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் அமைந்தால் மக்களுக்கு நன்மை பயக்கும் என கருதுகிறேன்.
தரமான படிப்பினை குழந்தைப்பருவம் முதல் இறுதிவரை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. அதன்படி ”இந்தியாவில் படிப்போம்” என்ற திட்டத்தை முன்னெடுக்கும் அதேவேளையில், படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகள் இந்தியாவில் பெருகினால் வெளிநாடுகள் சென்று பயிலும் இந்தியர்களின் எண்ணிக்கை குறையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் சமூக பாதுகாப்பினை எல்.ஐ.சி போன்ற பொது நிறுவனங்கள் மட்டுமே முன்னெடுத்து செல்ல முடியும். தனியார் மயமாக்கப்பட்டால் வியாபார நோக்கத்துடனே கையாளப்படும். அதனால், எல்.ஐ.சி, ஐ.டி.பி.ஐ பங்குகளை விற்பதற்கான மத்திய அரசின் அறிவிப்பை ஏற்கமுடியாது.
இருப்பினும், தாக்கல் செய்யப்பட்ட 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தேசத்தின் பொருளாதார நிலையைமுன்னேற்றி வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் எதிர்பார்க்கிறோம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!