நடிகர் ஜூனியர் பாலையா மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்.அவருக்கு வயது 70. கரகாட்டக்காரன், சுந்தரகாண்டம், கோபுர வாசலிலே, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவரது தந்தை… டி.எஸ்.பாலையா.
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், ‘சுந்தரகாண்டம்’ படத்தில் அட்டகாசமான கேரக்டரைக் கொடுத்தார். ‘சண்முகமணி’ ‘சண்முகமணி’ என்று பாக்யராஜை இவர் அழைக்கும்போதெல்லாம் தியேட்டர் வெடித்துச் சிரித்தது.’சாட்டை’ படத்திலும் நல்ல கேரக்டரில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.பெரும்பாலும் வில்லன் ரோலில் நடிக்க விரும்பாமல் ஒதுங்கி போனவர் இன்று காலமாகி விட்டார்..
More Stories
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கேப்டன்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை
கண்டித்த முதல்வர் , மன்னிப்பு கேட்ட தர்மபுரி எம்.பி செந்தில் குமார்