April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

யோகா போட்டிக்கு செல்லும் மாணவனை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கிய தெற்கு மாவட்ட செயலாளர்.

தாய்லாந்து யோகா போட்டிக்கு செல்லும் மாணவருக்கு ஊக்கத்தொகை

உலக அளவில் தாய்லாந்தில் நடைபெறும் யோகா போட்டிக்கு செல்லும் மாணவனை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கிய தெற்கு மாவட்ட செயலாளர்.

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையை சேர்ந்த மாணவன் கபிலன் மாநில அலவிலான யோகா போட்டியில் வெற்றி பெற்று தாய்லாந்தில் நடைபெறும் உலகளவில் நடைபெறும் யோகா போட்டிக்கு தேர்ச்சி பெற்று செல்லவிருக்கும் மாணவனை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் கலைஞர் அறிவாலயத்தில் வைத்து சால்வை அணிவித்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.

மேலும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மூலம் மாணவனுக்கு தேவையான உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் உறுதியளித்தார். அப்போது மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முத்துராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் மாரிமுத்து, சாம்பவர் வடகரை மாறன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

About Author

error: Content is protected !!