March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அதிமுக பொதுக் குழுவில் திமுக அரசுக்கு கண்டனம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்கள்.
மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றி பெற்றதற்கு நன்றியும், பாராட்டும்.
மிக்ஜாம் புயலை முன்பே எதிர்கொள்ள திட்டமிடாமல் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யாமல் இருக்கும் திமுக அரசுக்கு கண்டனங்கள்.
(1) சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்பேசும்போது ஒளிபரப்பு செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கண்டனம். (2) எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை கடைபிடிக்காத பேரவை தலைவருக்கு கண்டனம்.
கட்சத்தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம்.சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கும் விரோத போக்கிற்கும் கண்டனம். திமுகவின் மக்கள் ஊழல் ஆட்சி நடத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசுக்கு வலியுறுத்தல். நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல். ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.
நெசவாளர்களின் வாழ்க்கை நலிவடையக் காரணமாக இருந்து, நெசவுத் தொழிலை விடுத்து மாற்றுத் தொழிலைத் தேடும் நிலையை ஏற்படுத்தி, தமிழ் நாட்டில் நெசவுத்
தொழிலையும், நெசவுத் தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கத் தவறிய விடியா திமுக அரசுக்குக் கண்டனம் !
சமூக நீதியை வாய்கிழியப் பேசும் திமுக, பட்டியலின மக்களுடைய நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறித்தும்; அனுபவிக்க முடியாமல் தடுத்தும்; அவர்களுக்கு அளிக்கப்பட்டு 39 வரும் சலுகைகளை தட்டிப் பறிக்கும் வகையில் செயல்படும் விடியா திமுக அரசின் பட்டியலின மக்கள் விரோதப் போக்கிற்கு
கண்டனம்! தமிழக உயர்கல்வியின் தரம் குறையும் வகையில், கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவசர கதியில் பொதுப் பாடத் திட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

i) தாய் மொழியாம் தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக 8-ஆவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தம் 43 கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தல்!
ii) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவர வலியுறுத்தல்!
சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்து, சமூக நீதிக்கு எதிரான திமுக-வின் மக்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனம் !

தமிழகத்தின் உரிமையான காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுக-வின் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்திற்கு கடும் கண்டனம் !

‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும்; ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே ‘நீட் தேர்வு’ ரத்துதான் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சர் . ஸ்டாலினும், திமுக-வைச் சேர்ந்தவர்களும் மக்களை ஏமாற்றி வாக்குறுதி சொன்னதைச் செய்வோம் என்று கூறிஅளித்தனர். மக்களை ஏமாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்!

தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறியும்; பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கத் தவறியும்; வெள்ள சேர்ந்த மக்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைச் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ உதவிகளைச் செய்யத் தவறியும், முடங்கிப் போயிருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கும் கடும் கண்டனம்!

மக்கள் நலன் கருதி புரட்சித் தலைவி அம்மா அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறியது; சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தில் இருந்து ஆவின் பால் விலை வரை உயர்த்தி, மக்களை வஞ்சித்து வரும் சர்வாதிகார விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும்; புதிய அணை கட்டப்போவதாக நெருக்கடி கொடுக்கும் திமுக-வின் கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருக்கும் கேரள அரசின் செயலை கண்டிக்காமலும்; அதைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்தாமலும் மெத்தனப் போக்கில் இருந்து வரும் மக்கள் விரோத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பெற்றிடும் வகையில், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைந்திட இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல் !

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிடும் வகையில், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் களப்பணி ஆற்றிட சூளுரை!

சிறப்பு தீர்மானம் :
கழக நிறுவனத்தலைவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் MGR அவர்களின் துணைவியார் முன்னாள் முதல்வர் ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட சிறப்பு தீர்மானத்தை கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் நிறைவேற்றப்பட்டது..

About Author

error: Content is protected !!