June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் கேப்டன் அஞ்சலி செலுத்தினார்

பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளற்ற ஒரு நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற பெருங்கனவைக் கருக்கொண்டவர்கள் இவருக்கு முன்பு ஏராளமானவர்கள் இருந்திருக்கலாம். ஆனால், அதற்கான செயல்வடிவத்தின் மனித உரு என்றால் அம்பேத்கரின் சட்டவரைவுக்குழுதான்.அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில், அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களும் அவரது திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தேமுதிக தலைமைக்கழகத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
கேப்டன்

About Author

error: Content is protected !!