June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உணவளிக்கும் விவசாயிக்கு மலர் தூவி மரியாதை செய்ய வேண்டும் !-கல்வியாளர் இராஜசேகரன்

ஊரடங்கில் உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்க விளைநிலத்தில் களம் காணும் விவசாயிக்கு மலர் தூவி மரியாதை செய்ய வேண்டும் !

ஊரடங்கால் உணவுத் தட்டுப்பாடு வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுக்கள் என்று மத்திய , மாநில அரசுகளுக்கு இந்திய நுகர்வோர் பாதுகாப்பு கழகம் விடுத்த எச்சரிக்கை விவசாயத்துறையின் மீது தனிக் கவனத்தை ஈர்த்துள்ளது..கடந்த இரண்டு நாட்களாக பாரத பிரதமரும் தமிழக முதல் வரும் ஊரடங்கு பாதுகாப்பு பணிகளில் பிராதன இடத்தில் உணவு மேலாண்மையை கவனிக்கத் தொடங்கி விட்டனர் தமிழக மக்கள்தொகையில் 70 சதவிதம் பேர் முகக் கவசமோ ,கைக்கவசமோ இல்லாமல் கோடை வெயிலில் வெந்து , கருகி மொத்த மக்களின் உணவுத் தேவைக்காக உணவு தானியங்கள் ,காய்கறி – பழங்கள் பயிரிட்டு தட்டுப்பாடு இல்லாமல் சந்தைப் படுத்தி வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் எதைத் தொட்டாலும் கையை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. நாள் முழுக்க சகதியிலும் புழுதியிலும் உருண்டு புரளும் உழவனுக்கு அது சாத்தியமா? இந்தியா எனும் மாபெரும் நிலப்பரப்பில் 130 கோடி மக்களில் பெருவாரியானவர்கள் வேளாண் பணிகளில் இருப்பதால் தொற்றுநோய் பரவல் காலத்தில் அவர்களுக்கான மருத்துவ வசதி என்பது அறிவியல் பூர்வமான திட்டமிடலாக அமையவேண்டும். நவீன புள்ளியல் சார்ந்த முன் அனுபவ ஆளுமையும் வேண்டும் . இந்த நீண்டகால ஊரடங்கு விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

மானாவாரி பயிர்கள்

குறைந்த மழையளவு அதாவது ஆண்டுக்கு 800 மி.மீக்கு குறைவான மழை பெய்யும் நிலப்பரப்பே இந்தியாவில் அதிகம். குறைந்த மழைப்பதிவையும் , மண்ணின் ஈரப்பதத்தையும் வைத்து உத்திரவாதமில்லா விளச்சல் நிலைப்பாட்டோடு சாகுபடி செய்து அறுவடைக்கான இறுதிகட்டத்தில் பயிர் கருகிப் போவது விவசாயிகளுக்கு வேதனையான நிகழ்வுகள். இத்தகைய சாகுபடியில் பருத்தி , சிறுதானியங்கள் , நவதானியங்கள் வறட்சி தாங்கும் பயிர்களாக சாகுபடி செய்யப்படுகிறது. இடர்பாடுகளை தாண்டி விளையும் பயிர்களும் ஊரடங்கால் தேக்கநிலையை எட்டி விடுகிறது. ஏற்றுமதி தடைபடுவதும் , சந்தையின் நேரக் குறைப்பும் நாமக்கல் போன்ற இடங்களில் கோழிப்பண்ணைகளின் பாதிப்பும் விவசாயி களை கதிகலங்கச்செய்து விடுகிறது .

முதலமைச்சராக உருவெடுத்த விவசாயி

தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் தன்னை விவசாயி என அடையாளப்படுத்திக்கொள்வதில் எப்பொழுதும் பெருமையடைகிறார். விவசாய குடும்பத்தின் பிறப்பு என்பதால் உள்ளுணர்வை வெளிப்படுத்துவதில் வாஞ்சையுடன் தடம்பதிக்கிறார். கடந்த இரண்டு நாட்களில் விவசாயத்தில் தேவைக்கு மேல் உபரியாக விளையும் பழம், காய்கறிகளை குளிர்சாதன கிடங்குகளில் பாதுகாக்க சலுகை அறிவிக்கிறார் . விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத்தை ரத்து செய்கிறார் . உழவனுக்கு விளைபொருளுக்கு நியாயவிலை கிடைக்க நேரடியாக தோட்டக்கலை துறை யை சந்தைப்படுத்த உத்தரவிடுகிறார். விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வரும் நெல் , சிறுதானியம் நிலக்கடலை , தேங்காய் , வெங்காயம் உள்ளிட்ட எந்தப் பொருளுக்கும் சந்தைக் கட்டணம் கிடையாது என்பதும் முக்கிய அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது.. சந்தை கட்டணம் என்பது விற்பனை மதிப்பில் 1 சதவீதம் .இந்த கடினமான நேரத்தில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஆறுதல் இந்த அறிவிப்பு . ஊரடங்கில் இருந்து விவசாயப்பணிகளுக்கு விலக்களித்தது அறிவிப்பின் உச்சம். ஊரடங்கு அறிவித்த உடன் அறுவடை செய்ய ஆளின்றியும் சந்தைக்கு செல்ல போக்குவரத்தின்றியும் சாலையோரங்களிலும் , வீதிகளிலும் வீணாக்கப்பட்ட விளைபொருட்களுக்கு பாதுகாப்பை தந்தது அனைத்து தரப்பினரும் வரவேற்கும் முதலமைச்சரின் உன்னத முடிவு.

பிரதமரின் பனிப் பார்வை

இந்திய விவசாயிகளில் பெரும்பாலானோர் பாராம்பரியமுறையிலேயே சாகுபடியை மேற்கொண்டுவருகின்றனர் . குறிப்பிடபகுதிகளில் ஒரேவிதமான சாகுபடியில் ஒட்டுமொத்த விவசாயிகளும் ஈடுபடுவதால் குறிப்பிட்ட பொருட்கள் சந்தையில் தேவையைவிட அதிகமாக குவிந்து விடுகிறது. இதனால் விலையின்றி வீதியில் கொட்டும் நிலை ஏற்படுகிறது. இதனால் அடுத்த பூ பயிர் மகசூலுக்கு நிலத்தை பண்படுத்த பணமின்றி தத்தளிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். நாடுமுழுக்க வேளாண்மை அதிகாரிகளைக் கொண்டு வட்டார அளவில் பயிற்சிகள் வழங்க வேண்டும் விவசாயிகளை மாற்று பயிரிட்டு ஒரே பொருள் தேவைக்கு அதிகமாக குவிவதை தவிர்த்து சீரான விளைச்சல் , நிலையான வருமானம் கிடைக்க பயிற்சியும் பயிலரங்கமும் பயனளிக்கவேண்டும் .பாரத பிரதமர் சமீபத்திய ஊரடங்கு அறிவிப்பில் விவசாயத்தை காக்க தொழில்நுட்பத்தையும் புதிய கண்டுபிடிப்புகளையும் கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார். விவசாயமுன்னேற்றத்துக்கு உகந்த பாதையை மத்திய அரசு அமைத்தால் பணப்பயிர் சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகள் கவனம் செலுத்த தொடங்கிவிடுவார்கள். மத்திய ,மாநில அரசுகள் உணவு கொள்முதல் கழகத்தின் வாயிலாக உணவுதானிய கொள்முதலை அதிகரிக்க வேண்டும். இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் விளையும் 1340 மில்லியன் டன் உணவு தானியத்தில் 358 டன் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. விவசாயிகளின் சிரமத்தை போக்கவும், ஊரடங்கு போன்ற இடர்பாடான காலங்களினல் உணவுப்பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய பெரிய அளவில் உதவியாக அமையும் .

இயற்கை தந்த இடைவெளி

உலக சுகாதார அமைப்பு தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிப்பதே முதல் கடமையாக வலியுறுத்துகிறது. நகரங்களில் உள்ள ஜன நெருக்கடி போல் இல்லாமல் கிராமத்து வீடுகளும் விளைநிலங்களும் விசாலமாக இருப்பதால் இயற்கையாகவே சமூக இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது விவசாயிகளின் தற்காப்புக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடுகிறது. ஊரடங்கு காலத்தில் உடல் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிளகு ,இஞ்சி , பூண்டு மஞ்சள் , பச்சை காய்கறிகள் , பழங்கள் சாப்பிடுங்கள் கபசுர குடிநீர் , நிலவேம்பு கஷாயம் குடிக்க அறிவுறுத்துகிறார்கள். யாரும் மைலோ , ஹார்லிக்ஸ் , பூஸ்ட் , காம்ப்ளான் குடியுங்கள் என்று பரிந்துரைக்கவில்லை எனவே விவசாய உற்பத்திப் பொருட்களே நம் ஆரோக்கியத்தின் பாதுகாப்பு கவசமாக முன்நிறுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு மலர் தூவி மரியாதை

நெருக்கடி காலங்களில் களப்பணியில் இருக்கும் மருத்துவ பணியாளர்கள் , துப்பரவு பணியாளர்களை மலர் தூவி மரியாதை செலுத்துவதுபோல விவசாய களத்தில் உயிர் காக்கும் உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும் மலர் தூவி மரியாதை செய்ய வேண்டும். தற்காப்பை துறந்து கொரான வைரஸ் சவாலை எதிர்த்து அறுவடை செய்ய முடியாமல் முற்றி காய்ந்த விளைபொருட்களை கண்ணீருடன் சுமந்து உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்க கழனியில் போராடும் உழவனுக்கும் மலர்தூவி உரிய மரியாதை செய்ய வேண்டும் .

இந்திய பொருளாதாரமும் உழவனின் பெருமையும் உலக அரங்கில் தலைநிமிர்ந்து தளைக்கட்டும்.

கட்டுரையாளர்    ஜா.இராஜசேகரன் ,ல்வியாளர் ,                                                                                   சமூக ஆர்வலர்  ,                                                                         மனித வள மேம்பாட்டு ஆலோசகர் 

About Author

You may have missed

error: Content is protected !!