June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கமல்ஹாசன் வீட்டில் நோட்டிஸ் தமிழக அரசு மன்னிப்பு கேட்க தொழிலாளர்கள் அணி வலியுறுத்தல்

எவ்வளவு அவதூறுகளை பரப்பினாலும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டு(ம்) வருவார் நம்மவர்”
தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் தொழிலாளர்கள் அணி வலியுறுத்தல்.

தனது இல்லத்தையே கொரானா வைரஸ் தொற்றை தடுக்க ஏழை, எளிய மக்களின் மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து, தமிழக அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் நல்லவர்,

நம்மவர் எங்களது தலைவர் கமல்ஹாசன் அவர்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஒருவர் தனிமைப்படுத்திக் கொண்டார் என்பதை அறிவிக்கும் சுவரொட்டியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒட்டி நம்மவரை தனிமைப்படுத்தியிருப்பதாக சித்தரிக்க முயன்ற சென்னை மாநகராட்சிக்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

அறுபது ஆண்டுகால திரையுலக நட்சத்திரம், அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்து பல்வேறு நல்ல விசயங்களில் முன்னோடியாக திகழ்ந்து வரும் அரசியல் கட்சித் தலைவரான அவர் மீது அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இதனை பார்க்கிறோம்.

எத்தனை இடையூறுகள் வந்தாலும், எவ்வளவு பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசியல் எதிரிகள் முன்னெடுத்தாலும் எங்களது தலைவர் அனைத்தையும் முறியடித்து பீனிக்ஸ் பறவை போல் மீண்டு(ம்) வருவார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

கமல்ஹாசனுடன் சு.ஆ.பொன்னுசாமி

அரசியல் எதிரிகளின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக மாநகராட்சி ஊழியர்கள் வெறும் அம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்த அம்புகளை எய்த வில் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநகராட்சியின் இந்த செயலுக்கு தமிழக முதல்வரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களும், நம்மவரின் ரசிகர்களும் அச்சப்பட வேண்டாம். நம்மவர் நலமாகவே இருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.என மக்கள் நீதி மய்யம்” தொழிலாளர்கள் அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி தனது கண்டன குரலை பதிவு செய்து இருக்கிறார்

About Author

error: Content is protected !!