May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பொதுக் கூட்டதில் பேசும் கருப்பசாமி பாண்டியன்

வரும் தேர்தலில் ஸ்டாலினுக்கு இடமே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் கருப்பசாமிபாண்டியன்

உள்ளாட்சி-சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு ஒரு இடம் கூட இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்

வள்ளியூரில் வீ.கருப்பசாமிபாண்டியன் பேச்சு

பொதுக் கூட்டதில் பேசும் கருப்பசாமி பாண்டியன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விழாவில் சிறப்புரை யாற்றும்கே. ஆர். பி. பிரபாகரன்

இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் வீ.கருப்பசாமிபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில் திமுக ஒரு குடும்பத்தின் சொத்தாக திகழ்கிறது. எதிரி கட்சி தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இரட்டை குழல் துப்பாக்கி போல முதல்வரும் துணை முதல்வரும் தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முழங்கை அளவு சட்டை அணிந்து விட்டால் அப்பாவு ஒரு போதும் காமராஜர் ஆகி விட முடியாது.
வழிதவறிச் சென்று பின்னர் திரும்பி சரியான வழிக்கு வந்த போது பாசத்தால் அன்பால் வரவேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.எம்ஜிஆர் ஜெயலலிதா தனது குடும்பத்தாரை கட்சிக்குள் ஒருபோதும் கொண்டு வரவில்லை

விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

ஆனால் கருணாநிதி ஸ்டாலின் தங்களது குடும்பத்தினரையே கட்சிக்குள் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு இடமே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்,       இவ்வாறு கருப்பசாமிபாண்டியன் பேசினார்.

கூட்டத்தில் ஒரு பகுதியினர்

விழாவில்

மாவட்ட செயலாளர் கே. ஆர். பி. பிரபாகரன் , இராதாபுரம் சட்ட மன்ற உறுப்பினர் இன்பதுரை , எம். என். நடராஜன். பாசறை செயலாளர் சேர்ம பாண்டி ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், அந்தோணி அமலராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!