February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நாம் அணிகிற ஆடை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா ?

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் அதென்ன ஆடைதான் முக்கியமா ?  என்பார்கள் நாம் ஒருவரை பார்த்ததும் அவருடைய ஆடையை வைத்துதான் ஆள் டிப் டாப்பாக இருக்கிறான் ,டீசன்ட் ஆக இருக்கிறான் என்பார்கள் , ஏவிஎம் அய்யா சரவணன் நினைவுக்கு வந்தால் அவரை white & white என்பார்கள் காரணம் ஆடைதான் ,சிலரை கிராமத்தில் சொல்வார்கள் கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் துணி மணிக்கு ஒன்னும் குறையில்லை என்று காரணம் ஆடைதான்
அந்த ஆடை எப்படி இருக்க வேண்டும் சொல்கிறார் நமது ஜோதிடர் பிரேம்சந்த்_நம்பிராஜன்
கிழிந்த ஜீன்ஸ் ஒட்டுப் போட்ட ஜீன்ஸ் அணிபவர்களுக்கு சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.அங்கே கேதுவின் தாக்கம் அதிகமாக இருக்கும் இதையும் வைரலாக்கிய கிரகங்கள் சக்தியை புரிந்து கொள்ளுங்கள்.அந்த காலத்தில் கிழிந்த துணியை நாம் அணிவதற்கு கூச்சப்படுவோம்.கிழிந்த துணியை யார் அணிந்திருப்பார்கள் கொஞ்சம் யோசியுங்கள்.


பிச்சைக்காரர்களின் சீருடைகளில் கிழிந்து துணிகள் ஒட்டுப் போட்ட துணிகள் மிக முக்கியமான அங்கத்துவம் வகிக்கும்.சனி+கேது இணைவுள்ளவர்களுக்கும் சனி கேது பார்வை சேர்க்கை உள்ளவர்களுக்கும் சனியின் நட்சத்திரத்தில் கேது இருப்பவர்கள் கேதுவின் நட்சத்திரத்தில் சனி இருப்பவர்கள் சனி உச்சமானவர்கள் சனி ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மாதிரி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் ஒட்டுப் போட்ட ஜீன்ஸ் சட்டை அணிவது சிறப்பாகும்.மற்றவர்கள் இதை அணிந்து அந்த கிரக சேர்க்கை செய்தால் தொழில் தடை தொழில் முடக்கம் பொருளாதார சிக்கல் பணதட்டுப்பாடு தானாக முன்வந்து நீங்களே ஏற்படுத்தும் வித்தையாகும்.துணிமணிகள் பொதுவாகவே கிழிந்ததை அணிவது சிரமத்தை தரக் கூடியதாகும்.கிழிந்த துணியை கந்தல் துணி என்றும் சொல்வதுண்டு.இந்த மாதிரி கிழிந்த துணிமணிகள் அணிபவர்கள் மேலே சொன்ன விதிகளில் உள்ளவர்களாக இருப்பது அவர்களுக்கு பாதிப்பை தராது.பொதுவாகவே அடியேனின் அனுபவத்தில் சட்டையோ பேண்ட்டோ வேஷ்டியோ கிழிந்து விட்டால் அதை பழைய துணியாகவே கருதி அணிவதில்லை.ஒரு பட்டன் பிய்ந்து விட்டாலும் சரி ஜிப் போய் விட்டாலும் சரி கலர் வெளுத்து சாயம் போனாலும் சரி சில சம்பிராதயங்கள் செண்டிமென்டலான விஷயங்களுக்கு சில துணிமணிகள் பாதுகாப்பதுண்டு அதை தவிர்த்து மற்ற அந்த துணிமணியை அதன் பிறகு அணிவதில்லை.சின்னதாக ஒரு பொட்டு வைத்தாலும் கூட கறையோ சிறு ஓட்டையோ வந்து விட்டாலும் மனம் அதை அணிய விரும்பாது.முதலில் படித்த படிப்பு ஆடை அலங்காரம் மற்றும் நாகரீகவியல் என்று சொல்லப்பட கூடிய fashion designing.வேலை செய்ததெல்லாம் பெரிய துணி சம்பந்தபட்ட நிறுவனங்களில் அதன்பிறகு ஒரு கட்டத்தில் அடியேனுடைய பதவியே தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் என்று சொல்லப்பட கூடிய quality controller quality Inspector quality assurance executive.தவறுகளை கண்டுபிடித்து திருத்துபவன் தவறுகளை சுட்டிக் காட்டி அதை நிவர்த்தி செய்பவன் தவறான விஷயங்களை நிராகரிப்பவன்.இதனாலேயே ஒருவரின் ஜாதகத்தை பார்த்தாலும் அதிலுள்ள ஓட்டைகள் முதலில் கண்டுபிடிக்க தோன்றும் அதை சரி செய்ய தோன்றும் நிராகரிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிராகரிக்க வைக்கும்.உடையில் கிழிந்த துணியை அணிவது அடியேனுக்கு பிடிக்காத விஷயம் அப்பா கூட பல நேரங்களில் விமர்சனத்திற்கு சொல்லும் பொழுது அவன் அவங்க தாத்தா மாதிரி ஒரு சட்டை பட்டன் பிய்ந்தாலும் அந்த துணியை போட மாட்டான் என்பார்கள்.சுக்கிரன் நட்சத்திரம் பரணி எப்படி வசீகரிக்க கூடிய அளவில் முதலில் துணிகள் இருக்க வேண்டும்.இன்றைக்கும் சிறு வயதிலிருந்தே அடியேனை தான் துணிகடைகளுக்கு குடும்பத்தினர் அழைத்து செல்வதுண்டு கலர் செலக்ட் பண்ணி தரவும் தரத்தை நிர்ணயம் செய்வதற்கும் விலையை கண்டுபிடிப்பதற்கும்.ஏனெனில் நீங்கள் வாங்கும் சட்டை துணியின் உண்மையான விலை யாமறிவோம்.துணி வியாபாரம் செய்தவனுக்கு துணிமணிகளுடன் படுத்து கிடந்தவனுக்கு துணியை பருத்தியிலிருந்து பார்த்தவனுக்கு துணிway துணை

ஜோதிடர் முகவரி

#பிரேம்சந்த்_நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி எண் #9789168398/7708873905

About Author

error: Content is protected !!