February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆனந்த விநாயகர்

நிரந்தரமான வருமானம் வேண்டுமா ? இவரைப் பிடிங்க

சனி+கேது இணைவிற்கு இவரை வணங்குங்கள் ஆதி=முதல் அந்தம்=முடிவு இவர்கள் இருவரையும் சனிபகவானால் பிடிக்கவே முடியவில்லை.

அதே போல தங்களை வணங்குபவர்களையும் சனிபகவான் தொந்தரவுகள் செய்ய கூடாது என்று இவர்கள் சனிபகவானிடம் சத்தியம் வாங்கியுள்ளார்கள்.

ஆனந்த விநாயகர்

சென்னை அடையார் மத்தியகைலாஷில் இதே அமைப்பில் ஆனந்த விநாயகர் கோவிலில் சிலை உள்ளது.old mahabaliburam road starting LA இருக்கும் பறக்கும் ரயிலில் வந்தால் கஸ்தூரிபாய் நகர் இரயில் நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தூரம் சிக்னல் அருகே உள்ளது கோயில்.Google Map directionல போட்டு பார்த்தாலும் மத்தியகைலாஷ் என்று வரும்.இடம் கண்டுபிடிக்க கஷ்டப்படவே தேவையிருக்காது.

அடியேனுக்கு தெரிந்தளவிற்கு வேறு எந்த கோவிலிலும் இது போன்ற சிலை அமைப்பு பார்த்ததில்லை.தொழில் தடை இருப்பவர்கள் தொழிலில் சிக்கல் இருப்பவர்கள் உத்தியோகம் கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் சண்டைகள் ஏற்படும் சூழ்நிலையில் உள்ளவர்கள் மேலதிகாரிகள் தொந்தரவிற்கு ஆளானவர்கள் உத்தியோகம் சரியாக அமையாதவர்கள் அடிக்கடி வேலையை மாற்றிக் கொண்டேயிருப்பவர்கள் சரியான ஊதியம் கிடைக்காதவர்கள் நிரந்தரமான வருமானம் கிடைக்காதவர்கள் தொழிலில் எப்பொழுதும் சிக்கலை சந்திப்பவர்கள் தொழிலில் நஷ்டமடைபவர்கள் வணங்கவும்.

நல்ல மாற்றங்கள் நிகழும்.இவர்கள் இருவருமே ராகுவை போலவும் கேதுவை போலவும் சனியை போலவும் அவர்களின் கெட்ட பலன்களை அறவே குறைத்து நிறைய விஷயங்களை நல்லபலன்களாக மாற்றி தரக் கூடியவர்கள்.எப்பொழுதெல்லாம் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்கின்றேனோ அப்பொழுதெல்லாம் இவர்களை நேரில் சென்று பார்த்து விடுவதுண்டு அல்லது இந்த படத்தை பார்ப்பதுண்டு.
ஆதி=ஸ்ருதி=பூர்ணம்=கணபதி அந்தம்=ஸ்ம்ருதி=சம்பூர்ணம்=மாருதி
ஆத்யந்தபிரபு=ஸர்வத்ரசம்பூர்ணம்
சகலசௌபாக்கியங்களும் சித்தியாகும்.
சென்னை வாழ் மக்கள் இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்வது நன்மை பயக்கும்.இங்கே மற்றொரு உலக அதிசயம் உள்ளது வேறொரு பதிவில் அதைபற்றி எழுதுவோம் ஆதலால் இயன்ற பொழுதெல்லாம் இந்த கோயிலுக்கு சென்று இவரை வணங்குவது சிறப்பை தரும்

ஜோதிடர் முகவரி

நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி எண் 9789168398/7708873905

About Author

error: Content is protected !!