May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரயில்வேஅமைச்சரிடம் வசந்தகுமார் எம்.பி கோரிக்கை மனு அளித்தார்

ரயில்வே அமைச்சரிடம் வசந்தகுமார் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் அவர்கள் மத்திய ரயில் போக்குவரத்துத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை சந்தித்து ரயில் சேவை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனு கொடுத்துள்ளார் அதில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது
கோரிக்கை விபரம்

ரயில்வேஅமைச்சரிடம் வசந்தகுமார் எம்.பி கோரிக்கை மனு அளித்தார்

1, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களை உலகத்தரம் வாய்ந்த ரயில்
நிலையங்களாக மாற்றியமைத்தல்,
2. சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு இரவில் புறப்படும் ரயில் சேவை ஒன்றை
ஏற்படுத்துதல்.
3, குழித்துறை ரயில் நிலையம் அருகாமையில் மக்கள் ரயில் பாதையை ஆபத்தின்றி கடக்க நடைமேம்பாலம் ஒன்றை கட்டுதல். கப்பியறை -காரவிளை ரயில் நிலையங்களுக்கு இடையேயும் மற்றும் குழித்துறைஇரணியல் நிலையங்களுக்கு இடையேயும் முறையே உள்ள ரயில்வே லெவல் கிராஸிங் எண்.கி.மீ. 266/3-4 மற்றும் பி.ஆர். எண்.207-க்கு பதிலாக ரயில்வே மேம்பாலம் கட்டுவித்தல்,
5. பள்ளியாடி ரயில் நிலையம் அருகாமையில் மடத்துவிளை லெவல் கிராஸிங் எண். கி.மீ.
263/9-க்கு பதிலாக சுரங்ப்பாதை அமைத்தல்,
6, பொதுமக்கள் இடையூறு ஏதுமின்றி வயல்வெளிகளுக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் அருகில் (கி.மீ 285/10-11) சுரங்க நடைபாதை
அமைத்தல்,
7. குழித்துறை-இரணியல் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் மார்த்தாண்டம்கருங்கல் சாலையில் விரிக்கோடு அருகில் லெவல் கிராஸிங் கி.மீ 215/500-600-க்கு
பதிலாக வாகன போக்குவரத்து மேம்பாலம் அமைத்தல், உள்ளிட்ட கோரிக்கைள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்

About Author

error: Content is protected !!