March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பழனி புகைவண்டி

பழனி தைப்பூச சிறப்பு ரயில்

பழனி புகைவண்டி

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு ரயில்வே சார்பாக கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மதுரை ரயில் நிலையத்திலிருந்து 08.02.2020 அன்று காலை 08.45 மணிக்கு சிறப்பு விரைவு ரயில் புறப்பட்டு முற்பகல் 11.45 மணிக்கு பழனி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் பழனி ரயில் நிலையத்திலிருந்து 08.02.2020 அன்று இரவு 08.00 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 10.15 மணிக்கு மதுரை சென்றடையும்.

கோயம்புத்தூர் – பழனி பயணிகள் சிறப்பு ரயில் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 02.02.2020 முதல் 12.02.2020 வரை காலை 09.45 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 12.45 மணிக்கு பழனி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் பழனியிலிருந்து 02.02.2020 முதல் 12.02.2020 வரை மதியம் 01.45 மணிக்கு புறப்பட்டு மாலை 04.45 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும்.

About Author

error: Content is protected !!