February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஸ்காச் விருது பெற்ற ஆட்சியர்கள் முதல்வோரோடு சந்திப்பு

ஸ்காச் வெள்ளி விருது பெற்ற ஆட்சியர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 30.1.2020 இன்று தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் சந்தித்து, புதுடில்லியில் 11.1.2020 அன்று நடைபெற்ற ஸ்காச் விருது வழங்கும் விழாவில், கடலூர் மாவட்டத்தில் களர் மற்றும் உவர் தன்மை கொண்ட வளம் குன்றிய நிலப்பரப்பினை சீர்திருத்தம் செய்து அதன் உற்பத்தி திறனை மீட்டமைக்காகவும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பண்ணைக்குட்டைகள் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தியமைக்காகவும் வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வழங்கப்பட்ட 2 ஸ்காச் வெள்ளி விருதுகள், பண்ணைக்குட்டைகள் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட ஸ்காச் வெள்ளி விருது மற்றும் நுண்ணீர் பாசன திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு வழங்கப்பட்ட ஸ்காச் வெள்ளி விருது, ஆகிய 4 ஸ்காச் வெள்ளி விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

ஸ்காச் விருது பெற்ற ஆட்சியர்கள் முதல்வோரோடு சந்திப்பு

About Author

error: Content is protected !!