June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரத்தில் அனைத்து சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது

பாவூர்சத்திரத்தில் அனைத்து சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் திருநெல்வேலி iதென்காசி மாவட்டங்களில் உள்ள  பல்வேறு ஊர்களில் இருந்து கோவில் கமிட்டி தலைவர்கள், ஊர் கமிட்டி தலைவர்கள்,நாட்டாண்மை  என சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் திரளான பெண்களும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை  வெளிப்படுத்தினர்

கூட்டத்தில் கலந்து கொண்டு பலர் தங்களின் கருத்துகளை வெளிபடுத்தினார்

இதன் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே.காளிதாசன் பேசியதாவது

நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் ஒரே கருத்தாகும். இதில் சாதி, சமுதாய
இந்த அனைத்து சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டமானது ஒரே ஒரு நோக்கத்திற்காக கூட்டப்பட்டுள்ளது.


அதாவது நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் ஒரே கருத்தாகும். இதில் சாதி, சமுதாய , இன வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்று கூடியுள்ளார்கள். அதாவது நமது மாவட்ட பகுதிகளில் உள்ள அணைத்து ஊர்களிலும், நகரப்பகுதிகளிலும் பாரம்பரியமாக காலாகாலமாக நடத்துகின்ற திருவிழாக்கள், கொடை விழாக்கள், பண்டிகை கால விழாக்கள், இரவு 10.00 மணிக்கு மேல் முன்பு நடந்தது போன்று நடைபெறவேண்டும். அதற்கான கட்டுப்பாட்டை அரசு தளர்த்த வேண்டும். அதே நேரத்தில் சட்ட விதிமுறைகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டே நடத்துவோம், சட்ட ஒழுங்கிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணமும், பிரச்சனை இல்லாத வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்துவோம் என அணைத்து சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
எனவே நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று அவர்களின் அடிப்படை உரிமைக்கு நியாயம் வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.

விழா மேடையின் ஒரு பகுதி

இங்கே வருகை தந்துள்ள அணைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
நம்முடைய தென்காசி, நெல்லை மாவட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள அணைத்து சமுதாய பெரியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் அணைவரையும் இங்கே எந்தவித வேறுபாடுமின்றி ஒருசேர காணுவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
திருநெல்வேலி & தென்காசி மாவட்ட அணைத்து சமுதாய பாரம்பரியம் காக்கும் கமிட்டியின் பொதுமக்கள் சார்பாக நிறைவேற்றப்படுகின்ற ஏகமனதான தீர்மானம். தீர்மானம் :
நம்முடைய திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பகுதிகளில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் தங்களின் அடிப்படை உரிமையான பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு காப்பதற்கு காலகாலமாக, தலைமுறை – தலைமுறையாக நடைபெற்றுவரும் கொடைவிழாக்கள், கோவில் திருவிழாக்கள், ஆலய விழாக்கள், பண்டிகை கால விழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை முன் காலங்களில் நடந்தது

போன்று இரவு 10.00 மணிக்கு மேல் இரவு முழுவதும் நடைபெற வேண்டுமென்றும், எல்லா சமுதாய மக்களின் அடிப்படை உணர்வுக்கும், உரிமைக்கும், உண்மைக்கும் மதிப்பளித்து அரசும், அரசு நிர்வாகமும், நீதித்துறையும், அதற்கான அமைதியை வழங்க வேண்டுமென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

கூட்டத்தின் ஒரு பகுதி

இங்கே பேசிய பலபேர் தங்களின் மேலான கருத்துக்களை எடுத்துரைத்ததார்கள். அந்த கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுக்கவே நாம் இங்கே கூடியுள்ளோம். எல்லாருடைய மனதிலும் நீண்டநாளாக தேங்கிக்கிடந்த கருத்தை, அதாவது நோக்கத்தை நிறைவேற்ற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இங்கு கூடியுள்ளோம். ஆதலால் தான் அணைத்து வேற்றுமைகளையும் மறந்து ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு கூடியுள்ளோம், இதுவே நம் வெற்றிக்கு முதல் படியாகும்.
கால, காலமாக, வழிவழியாக நம்முடைய முன்னோர்கள் நடத்தி வந்த பாரம்பரிய திருவிழாக்கள், கொடை விழாக்கள், பண்டிகை கால விழாக்கள் நம் மாவட்ட பகுதிகளில் சிறப்புற நடத்த முடியவில்லை என மனவருத்தம் நமக்கெல்லாம் வந்துவிட்டது.



காரணம்: ஊர்கூடி, உறவுகள் கூடி தேர் இழுத்து, பொங்கல் வைத்து, இறைவனுக்கு ஆராதனைகளும், அபிஷேகங்கள் செய்தும், கலை நிழச்சிகள் நடத்தியும், புத்தாடைகள் அணிந்து, உறவுகளை அழைத்து விருந்து உண்டு மகிழ்வது என்பது பல காலம் தொட்டு நடந்து வருகின்ற பாரம்பரிய நிகழ்சியாகும்.
அதுபோன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் புத்துயிர் பெற்று, புதுப்பொலிவுடன் நடத்தப்படவேண்டும் என்பதே நம்முடைய ஒன்றுபட்ட கோரிக்கையாகும். அதற்கான தடைகளை நியாயப்படியும், சட்டப்படி நீக்கவும் அதற்கான கோரிக்கைளை அரசிடமும், நிர்வாகத்திடமும் எடுத்துரைத்து நம்முடைய பாரம்பரியமான உண்மையான, உரிமைளை பெறுவதே நம்முடைய நோக்கமாகும்.முதாய , இன வேறுபாடுகள் இன்றி அணைவரும் ஒற்றுமையுடன் ஒன்று கூடியுள்ளார்கள். அதாவது நமது மாவட்ட பகுதிகளில் உள்ள அணைத்து ஊர்களிலும், நகரப்பகுதிகளிலும் பாரம்பரியமாக காலாகாலமாக நடத்துகின்ற திருவிழாக்கள், கொடை விழாக்கள், பண்டிகை கால விழாக்கள், இரவு 10.00 மணிக்கு மேல் முன்பு நடந்தது போன்று நடைபெறவேண்டும். அதற்கான கட்டுப்பாட்டை அரசு தளர்த்த வேண்டும். அதே நேரத்தில் சட்ட விதிமுறைகளுக்கு நாங்கள் கட்டுப்பட்டே நடத்துவோம், சட்ட ஒழுங்கிற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணமும், பிரச்சனை இல்லாத வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்துவோம் என அணைத்து சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.
எனவே நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று அவர்களின் அடிப்படை உரிமைக்கு நியாயம் வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இங்கே வருகை தந்துள்ள அணைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
நம்முடைய தென்காசி, நெல்லை மாவட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள அணைத்து சமுதாய பெரியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் அணைவரையும் இங்கே எந்தவித வேறுபாடுமின்றி ஒருசேர காணுவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
ஆலோசனை கூட்டத்திற்கு தட்சன மாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை வைத்தார். வென்னிமலை முருகன் கோவில் நிர்வாக குழு தலைவர் எம்.கே.வி.கே.பி.ஜெயச்சந்திரன், செயலாளர் திருமலை குமாரசாமி, தொழிலதிபர் கருத்தப்பாண்டி நாடார், பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட் செயலாளர் நாராயணசிங்கம், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், தங்கவேல் செட்டியார் முன்னிலை வகித்தனர்.
வக்கீல் சாக்ரடீஸ் தொகுத்து வழங்கினார். தொழிலதிபர் ‘சரண் ‘ஆர்.சரவணண் வரவேற்றார். வென்னிமலை முருகன் கோவில் பொருளாளர் கே.ஆர்.பால்துரை, யூனியன் முன்னாள் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ், தட்சன மாற நாடார் சங்க கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் கணேச நாடார், கடையம் முன்னாள் யூனியன் தலைவி செல்வி சங்கு கிருஷ்ணன், முன்னாள் சேர்மன் சேம்பர் செல்வராஜ், மைலப்பபுரம் பிரபாகரன், குமரன் பன்னையார் மற்றும் அனைத்து சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்

About Author

error: Content is protected !!