May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிகதலைவர் கேப்டன் பொங்கல் விழா அறிக்கை

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர்கேப்டன் விஜயகாந்த் பொங்கல் விழா சம்பந்தமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்  அதில்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் சாதி, மதம் இவற்றை புறம் தள்ளி அனைவரும் ஒற்றுமையை போற்றும் வகையில் வருடம் தோறும் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து கொண்டாடும், உழைப்பின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் பண்டிகை. இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே என்பதை தேமுதிக தனது கொள்கை முழக்கமாக கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் தேமுதிக வரும் 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், மேற்கு சென்னை மாவட்டம், அம்பத்தூர் பகுதி, கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் எனது தலைமையில் பொங்கல் விழாவினை புத்தரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள், நெய் போன்ற பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி, பொங்கல் பண்டிகையை கொண்டாடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று அந்தந்த மாவட்டங்களில் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் அனைவரும் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கி, சிறப்பான முறையில் பொங்கல் விழாவினை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

2 Attachments

About Author

error: Content is protected !!