May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது  , தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

அதனை முன்னிட்டு  கோவிலில் முன் பத்து, பின் பத்து நாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பஜனை மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், கோபூஜை தொடர்ந்து சுவாமி ஸயனஸேவை, காலை 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், கும்பாபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு பரமபதவாசல் திறப்பு பின்னர் சுவாமி திருவீதியுலா வந்தார்  , வீதியில் பெண்கள் பஜனை பாடியும் கோலாட்டம் ஆடியும்வந்தனர்  சுற்று வட்டரத்தில் இருந்து திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,

About Author

error: Content is protected !!