May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரம் கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புது  வருடப் பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடந்த 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து இன்று பிறந்த ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். ஆலயங்கள் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்திருந்தனர்.
புதுவருடத்தை முன்னிட்டு இன்று தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் மேற்கு சபை மன்ற தலைவரும்  சேகர குருவானவருமான சற்குணம் புது வருட ஆராதனை நடத்தினார் .


அதேபோல பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது .இதில் ஆலய பங்குதந்தை அமிர்த ராச சுந்தர்  கலந்துகொண்டு சபை மக்களுக்கு இறை ஆசியும் சிறப்பு திருப்பலியும் நடத்தினார்.
இதில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிறிஸ்தவர்கள் திரளாய் கலந்து கொண்டனர்.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் காவல்துறையினர் சிறப்பாக  செய்திருந்தனர்.
.

About Author

error: Content is protected !!