May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஜூவி நிருபர் சிந்து ,ராம்குமார் மீது வழக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

ஜூனியர் விகடன் இதழின் நிருபர் சிந்து ‘ மற்றும் ராம்குமார் மீது வழக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களிடம் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக கருத்துக்களை கேட்க சென்ற ஜூனியர் விகடன் இதழின் நிருபர் சிந்து மற்றும் புகைப்பட கலைஞர் ராம்குமார் இருவர் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் 447, 188, 505(1)பி பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதற்கு (505(1)பி பிணையில் விட முடியாத சட்டப்பிரிவாகும்) சென்னை பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 107 இலங்கை அகதிகள் முகாம்களில் 18,837 குடும்பத்தினர் -59,573 நபர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாமில் இல்லாமல் 34,355 நபர்கள் உள்ளார்கள். தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை குறித்து எவ்விதமான குறிப்புகள் இல்லை என்பது தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் கருத்தை, உணர்வுகளை அறிந்து வெளியிடுவது ஊடகங்களின் கடமையும் உரிமையும் ஆகும்.
கடந்த 27-12-2019 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களிடம், தேசிய குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக செய்திக்காக கருத்தறிய சென்ற ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்பட கலைஞர் ராம்குமார் ஆகிய இருவர் மீது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பிணையில் விட முடியாத பிரிவுகள் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தைப் போல வாய்ப்பூட்டு போடும் சட்டத்தை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் கையில் எடுத்துள்ளனர். ஜூனியர் விகடன் நிருபர், புகைப்பட கலைஞர் மீது போடப்பட்ட வழக்கு கருத்துரிமைக்கு எதிரான செயலாகும். பத்திரிகை ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கும் செயலாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் கருதுகிறது.இந்த எதேச்சதிகார மிரட்டல் வழக்கை கடுமையாக கண்டிப்பதுடன் உடனடியாக வாழ்க்கை திரும்பப் பெற வேண்டும் என்று காவல்துறை இயக்குநர் அவர்களை சென்னை பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக, PRESS COUNCIL OF INDIA-க்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் புகார் அனுப்பி உள்ளது.

About Author

error: Content is protected !!