May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பத்திரிகைகளுக்கு கூகுள் தருகிறது இலவச வெப்சைட்

அண்மையில் சென்னையில் நாளிதழ் ,மற்றும் புத்தகங்கள் நடத்திவருபவர்களுக்கு  கூகிள் ஒரு அரிய வாய்ப்பை வழங்கியது ,நாளிதழ் நடத்தும் அனைவருக்கும் இலவச வெப்சைட் உருவாக்கி அதை பயன்படுத்த உரிய முழு நாள் பயிற்சி அளித்து ,உரிய விளக்கங்கள் கொடுத்தார்கள் இதன் மூலம் சுமார் 60 பத்திரிகையாளர்கள் பயனடைந்தனர் , இதை நீங்களும் பயன் பெற வேண்டுமா மிக எளிது   உங்கள் மொழியில்.அதுவும் நீங்கள் விரும்பும் பெயரில் ஒரு தனித்துவமிக்க இணையதளம் முழுக்க முழுக்க எவ்வித கட்டணமும் இன்றி அவர்களே உங்களுக்காக உருவாக்கி கொடுகிறார்கள் , பின்னர் உங்கள் இணையதளம் சார்ந்த பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் இலவசமாககிடைக்கிறது , மேலும் உங்களின் சந்தேகம் தீர்வு அனைத்தும் உங்கள் உள்ளூர் மொழியில் கிடைக்கிறது

இதில் இணைய என்ன தகுதி வேண்டும் Registrar of Newspapers for India (இந்திய செய்தித்தாள்கள் பதிவாளர் அலுவலகத்தில் )பதிவு செய்யபட்டு இருக்கவேண்டும் அவ்ளோதான்

Googleளின் புதிய முயற்சியான ‘நவலேகா’ மூலம் டிஜிட்டல் முறைகளில் அதிகத் அனுபவம் இல்லாதவர்கள் கூட அச்சில் வெளியான நாளிதழ்களை முழுவதும் திருத்தக்கூடிய வடிவில் எளிதாக மாற்றி ஆன்லைனில் வெளியிடலாம். இதனால் உங்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்ட google AdSense மூலம் வழி வகை செய்கிறது ,மேலும் இதனால் அதிக வாசகர்கள் கிடைக்க வாய்ப்பு மேலும் நாம் இணையத்தில் இணைவதால் தவற விட்ட ஒரு செய்தியை அவர்கள் கண்டு வாசிக்க இயலும்

இப்போது இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடுவதற்கான வசதி உள்ளது. ஆன்லைனில் அதிகமான வாசகர்களைப் பெறும் வகையில் இலவச வெளியீட்டு இணையதளத்தைப் பெற உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள்.

இப்போதே பதிவு செய்க இனி ஆன்லைனில் உங்கள் நாளிதழ்கள்

கூகுள் ‘நவலேகா’ வெளியிட்டுள அறிவிப்புகள் இதோ

01 , ஆன்லைனில் உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள்.

எங்கள் குழு உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்தபின் தொடர்பு கொள்ளும். ஆஃப்லைனில் பதிவுசெய்த இந்திய வெளியீட்டாளர்கள் தங்கள் மொழி ஆன்லைனில் சேர்க்கப்படும்போது அறிவிப்பைப் பெற இப்போதே பதிவு செய்யலாம்.

02 நிபுணர்களின் உதவியுடன் இலவச வெளியீட்டு இணையதளத்தை அமைத்திடுங்கள்.

எங்கள் குழு உங்கள் ஆன்லைன் வெளியீட்டை அமைப்பதில் உதவுவதோடு அதைத் தொடர்ந்து பராமரிப்பதிலும் துணையாக இருக்கும்.

03 ,எங்கள் கருவிகளின் மூலம் முன்பே வெளியானவற்றையும் இனி வருவனவற்றையும் வெளியிடுங்கள்.

முன்பே வெளியானவற்றை எங்கள் கருவிகளின் மூலம் PDF கோப்புகளில் இருந்து வடிவத்தை மாற்றி வெளியிடலாம். தொழில்நுட்ப உதவியை எங்கள் பொறுப்பில் விட்டுவிடலாம்.

04,உள்ளடக்கத்தை நீங்களே நிர்வகியுங்கள்.

எங்கள் வெளியீட்டுக் கருவிகளைக் கொண்டு உங்கள் விருப்பத்திற்கேற்ப உள்ளடக்கத்தை எளிமையாகத் திருத்தியும் தேர்ந்தெடுத்தும் வெளியிடலாம்.

நவலேகா மூலம் வெளியீட்டாளர்கள் எவ்வாறு பயனடைய முடியும்?உங்கள் வெளியீட்டுக்கு அதிக வாசகர்களைப் பெறலாம்.உங்கள் வாசகர்கள் ஏற்கனவே ஆன்லைனில் நாளிதழ்களை தேடி வருகின்றனர். இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் ஆன்லைனில் உங்கள் இருப்பைப் பலப்படுத்தி அதிகமானவர்களைச் சென்றடையுங்கள்.

அமைப்பதற்குக் கட்டணம் எதுவுமில்லை.

இலவசமாக உங்கள் நாளிதழ்களை ஆன்லைனுக்கு மாற்ற உதவுவோம். முதல் மூன்று ஆண்டுகளுக்கு எங்கள் வெளியீட்டுக் கருவிகளுக்கும் டொமைன் பெயருக்கும் எந்தக் கட்டணமும் இல்லை. நீங்கள் முதல் அடி எடுத்து வைக்கத் தேவையானதெல்லாம் ஆன்லைனில் வெளியிடுவதற்கான உள்ளடக்கமும் முனைப்பும் மட்டுமே.

AdSense மூலம் உங்கள் வணிகத்தை மேம்படுத்தலாம்

AdSenseஸில் பதிவுசெய்து விளம்பர இடத்திற்காகப் போட்டியிடும் மிகப்பெரிய ஆன்லைன் விளம்பரதாரர் நெட்வொர்க்கைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் இதுகுறித்த விபரங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இது குறித்த சந்தேகம் இருப்பின் இவர்களை தொடர்பு கொள்ளலாம் , தமிழ்நாடு முழுவதும்

Google Chennai Support

Sasi Kumar     8248151823

Jaishiva           9790853364

Saiath             9952065421

தேவைபட்டால் உங்கள் இடம் தேடி வந்து சேவை செய்ய தயாராக இருகின்றனர்தொடர்பு கிடைக்காத பட்சத்தில் Google Navlekha என ஒரு குறுஞ்செய்தியை அனுபுங்கள் அவர்களே உங்களைத் தொடர்பு கொள்வார்கள்

அப்புறமென்ன இனி உங்கள் நாளிதழ் ,வார,மாத இதழ்களும் இணையத்தில் வாசிக்கலாம் வாங்க கால மாற்றத்தில் நாமும் இணைந்துகொள்வோம்

About Author

You may have missed

error: Content is protected !!