July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம்ஆலங்குளத்தில் வீடு புகுந்து பணம் நகை கொள்ளை எடுத்துச்சென்ற நான்கு பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தென்காசி கோர்ட் நீதிபதி தீர்ப்பு கூறினார் ஆலங்குளத்தை சேர்ந்தவர் மைனரின் அவர் மகன் விசுவாச ராஜா கடந்த 18 1 2002 அன்று இரவு இவரது வீட்டிற்குள் 5 பேர் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்த ரூபாய் 30,000 மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர் , இது குறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கல்லிடைகுறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் வயது 27 செல்லையா மகன் முருகன் வயது 32 அம்பாசமுத்திரத்தில் சேர்ந்த சுப்பையா மகன் வேலாயுதம் வயது 49 அரிகேசவநல்லூர் பாறையடி காலனியை சேர்ந்த ராஜசேகர் மகன் ஆறுமுகம் வயது 28 ஆலங்குளம் காந்தி தெருவைச் சார்ந்த வைத்தியலிங்கம் மகன் தங்கராஜ் என்ற ஸ்டீபன்ராஜ் வயது 37  என தெரியவந்தது  , இதனையடுத்து போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகையை மீட்டனர் இவ்வழக்கின் விசாரணையை தென்காசி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மாரியப்பன் தலைமறைவு ஆகிவிட்டார் இதனால் மற்ற நாலு பேர்கள் மீது விசாரணை நடைபெற்றது நீதிபதி காமராஜ் வழக்கினை விசாரணை செய்த முருகன் வேலாயுதம் ஆறுமுகம் தங்கராஜ் என்ற ஸ்டீபன்ராஜ் ஆகிய 4 பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜரானார்

About Author

error: Content is protected !!