May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

23 ஆயிரம் அடி மலையேறி இமயம் தொட்ட தமிழக சாதனைப் பெண்

தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் 23 ஆயிரம் அடி உயரமுள்ள மலை ஏறிசாதனை , அடுத்து தனது இலக்கு எவரெஸ்ட்  என்கிறார் 

பொள்ளாச்சியை சேர்ந்த ராஜமாணிக்கம், சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் சக்தி நிவேதா, பி.இ., பட்டதாரியான இவர் புனேயில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணி புரிகிறார். நிவேதாவிற்கு சிறு வயதிலிருந்தே மலை ஏறி சாதனை படைத்து ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

இதற்காக, எவரெஸ்ட் முகாமில் பயிற்சி பெற்றார். 8 ஆயிரம் அடி உயரமுள்ள முகாமிற்கு சென்று பயிற்சி பெற்ற அவர் 2019 ஆக.15ம் தேதி சுதந்திரதினத்தன்று, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 18 ஆயிரம் அடி உயரமான எல்பரஸ் மலை உச்சியில் ஏறினார். 24 நாட்களில் மலை ஏறியுள்ளார்.

2020 ஜன.26 குடியரசு தினத்தன்று தென் அமெரிக்காவில் உள்ள 23 ஆயிரம் அடி உயரமான அக்கன் காகூவா மலையில் 14 நாட்களில் ஏறி சாதனை படைத்தார். இவருடன் பிற நாட்டினரும் மலை ஏறியுள்ளனர்.

இதனையறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் மற்றும் தீயணைப்புதுறை ஏடிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் நிவேதாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

உலகிலேயே மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றார்.

சிவசு

About Author

error: Content is protected !!