March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஒட்டு மொத்த உலக தமிழர்களைபெருமை படுத்திய மோடி -விஜயகாந்த்

ஒட்டு மொத்த உலக தமிழர்களை பெருமைபடுத்திவிட்டார் பாரத பிரதமர் நரேந்திரமோடி குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தமிழகத்தில் சீன அதிபருடன் இரண்டு நாட்களாக தங்கியிருந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, தமிழக உணவை உண்டு, தமிழகத்தின் பெருமைகளையும், மாமல்லபுரம் சிற்ப கலைகள் குறித்தும், தமிழகத்திற்கும் சீனாவுக்கும் இடையே இருந்த பண்டையகால நட்பு குறித்தும் விளக்கி, அதை மீண்டும் புதுப்பித்து, இரு நாட்டு உறவையும் பலப்படுத்தி, உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தது மிகவும் பாராட்டுக்குரியது.

அதேபோல, இன்று காலையில் நடைபயிற்சியின் போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, தூய்மையான இந்தியாவை உருவாக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது.

இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!