May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ச ம க தலைவர் சரத்குமார்

144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்க சரத்குமார் வேண்டுகோள்

144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடிக்கவும், சமூக சமையலறை வாயிலாக உணவு விநியோகிக்கவும்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வேண்டுகோள்விடுத்துள்ளார்  இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

ச ம க தலைவர் சரத்குமார்
  • சமூக விலகலை அடுத்த 15 நாட்களுக்கு தீவிரமாக கடைபிடிக்க வேண்டிய சூழலில், மக்கள் வீட்டை விட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு வெளிவருவதற்கான முறைகள் வரையறுக்கப்படுவது அவசியம். அரசு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே சமயத்தில் மக்கள் அனைவரும் நாங்கள் பலசரக்கு சாமான் வாங்கபோகிறோம், காய்கறி வாங்கபோகிறோம், உணவகங்களுக்கு சென்று உணவு வாங்கபோகிறோம் என்று வீட்டை விட்டு வெளியே சென்று அந்தந்த கடைகளில் கூட்டம் கூட்டமாக குழுமினால் 144 தடை உத்தரவு தளர்த்தப்படக்கூடிய சூழல் உருவாகும் என்ற என் மனதில் எழுந்த ஐயத்தினை இங்கு பதிவு செய்கிறேன்.
  • எனவே, நகரம், கிராமப்புறங்களில் அமைந்துள்ள அனைத்து காய்கறிகடைகள், மளிகை கடைகள், உழவர் சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்திற்குள் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  • மேலும், சாலைகளில் காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் அதிகரித்த நிலையில், தனியார் உணவு நிறுவனங்களான Swiggy, Zomato, Uber Eats போன்றவற்றில் பணிபுரிபவர்கள் உணவை எடுத்து செல்வதில் உள்ள சிரமமும், அதனை கொண்டு செல்பவர்கள் சுயசுகாதாரத்துடன் உணவு பாதுகாப்பை உறுதிசெய்து விநியோகிக்கிறார்களா? என்பதிலும் ஐயப்பாடு எழுந்துள்ளது.
  • இக்கட்டான சூழலில் தனியார் உணவு நிறுவனங்களின் தரம் மற்றும் சுகாதார தன்மையை அரசு பரிசோதித்து அனுமதி அளிப்பதில் உள்ள கடினத்தன்மை காரணமாக சமூக சமையலறை அமைத்து உணவு விநியோகிக்க பரிசீலித்திட கேட்டுக் கொள்கிறேன்.

சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக அரசு, தேவைக்கேற்ப பொது சமையல் கூடங்கள் அமைத்து, எந்த வசதியும் இல்லாதோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கிட ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்ததை போல, சமூக சமையலறை வாயிலாக உணவு தேவைப்படுவோரின் இல்லங்களுக்கு நேரிடையாக சென்று உணவு விநியோகித்திட வேண்டுகோள் விடுக்கிறேன்.

கொரோனா வைரஸால் தேசம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து வரும் சூழலில், பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை கடுமையாக கடைபிடித்தால் தான் மக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். வலி இல்லையேல் ஆதாயம் இல்லை. அதுபோல, தற்போதைய சூழல் தாங்க முடியாத வலிகளையும், சிரமங்களையும் ஏற்படுத்தினாலும், நாளைய நல்வாழ்விற்காக இதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது நமது கடமை.என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் 

About Author

error: Content is protected !!