May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஹெல்மட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு

நெல்லையில் ஹெல்மட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு வழங்கிய காவல்துறை

சர்வதேச நண்பர்கள் தினத்தை ( ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு )
முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி போக்குவரத்து காவல்துறை & அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை இயக்கத்துடன் இணைந்து தலைக்கவச விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி நாளை முதல் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டும்படி கேட்டுக்கொண்டார்கள் .குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பந்துகள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.நெல்லை மாநகரை விபத்தில்லா நெல்லையாக்குவதை நோக்கிய பயணம் தொடர்கிறது .என திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையராக (சட்டம்&ஒழுங்கு)
அர்ஜுன் சரவணன் தெரிவித்தார்

“நமது நெல்லை
பாதுகாப்பான நெல்லை.”

About Author

error: Content is protected !!