February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா வைரஸ் சிறப்பு யாகம்

ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்தில் கொரோனா சிறப்பு பூஜை

கொரோனா வைரஸ் சிறப்பு யாகம்                                                    கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி பூஜை நடைபெற்றது மேலும் கொரனோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், பரவாமல்  இருப்பதற்காகவும் யாகம்,  கூட்டுப் பிரார்த்தனை  உள்ளிட்ட சிறப்பு பூஜை  நடைபெற்றது
கொரோனா கூட்டுப்பிரார்த்தனை
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்  16  திருக்கரங்கள் கொண்ட ஸ்ரீநரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புப்புக்குள்ளானவர்களுக்கு குணமடைய வேண்டியும்  சிறப்பு பூஜை  நடந்தது .
தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர்ஸ்ரீ நரசிம்மர் கோயில் 1100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது .

சுவாமி வலம் வருதல்
இததலத்தில் மாதம் தோறும் ஸ்ரீ  நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றுவருகிறது
இந்த மாதம்  சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை  16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தொடர்ந்து 12 வகையான பொருட்களால் அபிசேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து  பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம், தீபாராதனை நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் செய்திருந்தனர்.

About Author

error: Content is protected !!