May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் சுமார் 775 க்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டன

செங்கோட்டையில் இருந்து புளியரை வழியாக கேரளாவிற்கு வைக்கோல் ஏற்றி வாகனங்கள் சென்றுகொண்டிருப்பது வழக்கம் இதில் எந்த நடைமுறையும் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டு வந்தது மேலும் அதிகப்படியான வைக்கோல் லோடு ஏற்றி செல்லப்படுவதால் வாகனவிபத்துகள் ஏற்படுவது தொடர்ந்தது இதனை அடுத்து புளியரை சோதனை சாவடி வழியாக வைக்கோல் கொண்டு செல்வதற்கு பல வரன்முறைகளை காவல்துறையினர் விதித்தனர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 20 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாய தொழிலாளர்கள் இதனை நம்பி பிழைத்து வந்ததாகவும் தற்போது அது 3000 ஆக குறைந்துள்ளதாகவும் லாரிகளும் 50 ஆக குறைந்துள்ளதாகவும் இந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் பணியாளர்கள் வைக்கோல் ஏற்றி செல்லும்போது புளியரை பகுதியில் காவல்துறையினர் அதிகமான அபராதம் விதிப்பதாக மேலும் இரண்டு மூன்று நாட்கள் காக்க வைத்து அனுப்புவதாகவும் இதனால் தொழிலாளர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் இதனை கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்து சென்றனர்

i
இதே போல் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட கடையாலுருட்டியில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மாரியம்மன் காளியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு முன் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடம் என்று கூறப்படும் இடத்தில் திறந்த வெளி ஷெட் அமைப்பதை அங்குள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த வேற்று மதத்தவர்கள் எதிர்த்து ஊருக்குள் மதப்பிரச்சனை ஏற்படுத்த முயல்வதாகவும் இதனால் ஊரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு பின்னால் சிலர் சதி செய்வதாகவும் கூறி இதனை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரி சுமார் 100 க்கும் மேற்பட்டோர் வந்து மனு அளித்தனர்

About Author

error: Content is protected !!