February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வராகி அம்மன்

வேண்டிய வரம் தரும் வராகி அம்மன்

வேண்டினால் வேண்டிய வரம் தரும் வராகி
தமிழர்களின் பரமரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதும் ஆக இருப்பது வராகி உபாசனை பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள் இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள் வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும் மூன்று கண்கள் உண்டு இது சிவனின் அம்சமாகும்
வராகி அம்மன்

பைரவ சாமிக்கு சக்தியாக இருப்பதால் வாராஹி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லி சூனியம் வைத்தால் வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்கள் உருவாகும் அம்பிகையின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம் சிவன் ஹரி சக்தி என்று மூன்று அம்சங்களைக் கொண்டவளாக எதையும் அடக்க வல்லவள் சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள் மிருக பலமும் தேவகுணமும் கொண்டவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள் பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்
கூப்பிட்ட குரலுக்கு வருவாள் வராகி வழிபட்டால் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம் அன்பால் வெல்லலாம் எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள் வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள் இந்த பெயரை கேட்டாலே பலருக்கு பயம் வரும் அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராகி
சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் பஞ்சமி தாய் வராகி வாழ்வின் துன்பங்களை துரத்துபவர்கள் அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் பிராம்மி மாகேஸ்வரி வைஷ்ணவி கௌமாரி வராகி இந்திராணி மற்றும் சாமுண்டி சிவாலயங்களில் கன்னி மூலைகளில் காணலாம்
ஒளிக்கும் பராசத்தி யுள்ளே அமரில் கழிக்கும் சிந்தையில் காரணம் காட்டி தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாகும் அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே திருமூலர் பாடல் உலகையே ஒளிர்விக்கும் பராசக்தி என்ற நம்பிக்கை நம் மனதில் நிறுத்தினால் உண்மைப் பொருள் விளங்கும் மனம் தெளிவுபெறும் அவளை அறிந்து கொள்வதற்கு அனைத்து செல்வங்களும் வாய்க்கும் என்று திருமூலர் கூறுகிறார் அருள்மிகு முத்து வடுக நாத சித்தர் அம்பிகையின் மறுவடிவமான வராஹியிடம் சரணடைந்து சித்தி பெற்றார் அதுவும் தனது ஐந்தாவது வயதில்
அபிராமி அந்தாதி
நாயகி நான்முகி நாராயணி கை சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு வாய் அகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்றாயகி யாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே
பைரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே
அபிராமி பட்டர் பாடிய பாடல் அபிராமியின் துணையாக கொண்டாடிய அம்பிகையின் வடிவம் தான் வராகி
அன்னை வராகி வழிபாடு
தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரை அனைவர் ஆகிய நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில் மந்திர ஜபத்தால் வழிபடலாம் இல்லாதவர்கள் வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கலாம் அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை.பச்சை நிற துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும் வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும் வேறு திசைகளில் ஏற்றினால் ஜெபத்துக்கு உரிய பலன் நம்மை வந்து சேராது ஸ்ரீ மஹா வாராஹி ஆக்ஞா சக்கரத்தில் தியானிக்க வேண்டும் ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கேற்றி வராகியை வழிபட கோரிய பலன் கிட்டுவது உறுதி
ஸ்ரீ வராஹி அம்மன் துதி
ஓம் குண்டலினீ புரவாசினி சண்டமுண்டவிநாசினி பண்டிதஸ்ய மனோன்மணி வாராஹி நமோஸ்துதே அஷ்டலட்சுமி சொரூபிணி அஷ்டதாரித்ரிய நாசினி இஷ்டகாமபிரதாயினி வாராகி நமோஸ்துதே
தியான சுலோகம்
முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம் கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி
மந்திரம்
ஓம் வாம் வராஹி நமஹ ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம
காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே கல ஹஸ்தாய தீமஹி தன்னோ வாராஹி நமோஸ்துதே
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தின் வெளிப்புறம் வராஹி அன்னையின் ஆலயம் சிறப்பாக அமைந்துள்ளது வராஹியை வழிபடுவோம் வளம் பல பெறுவோம் வராகியை வழிபட்டு ராஜராஜசோழன் போருக்குப் புறப்பட்டுப் பல வெற்றிகளை பெற்றவன்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் ஒரு சிறிய வராகி சிலை உள்ளதுகாஞ்சிபுரம் மாவட்டத்தில் திருமால்பூர் என்ற ஊரில் வராஹிக்கு தனி கோயில் உள்ளது மயிலாப்பூரில் இருக்கும் வெள்ளீஸ்வரர் கோயில் பிரகாரத்தில் வராகிக்கு சிலை உள்ளது
வராகியை வழிபட்டால் வாக்குப் பலிதம் உண்டாகும் ஜோதிட ஜாம்பவான்கள் வராகியை தன் இஷ்ட தெய்வமாக வழிபடுவர் வராகியை பஞ்சமி திதியில் வழிபடுவது சாலச் சிறந்தது சப்தகன்னியரில் ஒருவரான வராகி அபரிதமான சக்தி கொண்டவள் மன்னர் காலங்களில் போருக்கு செல்லும் முன்பாகவே வராகியை வழிபடுவார்கள் மன்னர்கள் கலிகாலத்தில் உக்ர தெய்வமான வராகியை வழிபடுவது மிகவும் சிறப்பான விஷயம் ஆகும் யோக நரசிம்மர் ஆஞ்சநேயர் பிரத்தியங்கரா தேவி சரபேஸ்வரர் போன்ற மனித முகம் இல்லாத கடவுள்களை வழிபடுவது ராகு-கேது பரிகாரம் ஆகும் கலைத் துறையைச் சார்ந்தவர்கள் வராகியை வழிபடுவது சிறப்பாகும் குறிப்பாக சினிமா துறையைச் சார்ந்தவர்கள் வராகியை வழிபடுவது அவர்கள் துறை சார்ந்த வெற்றியை அடையலாம் துடியான தெய்வங்களை வழிபடுவது சாத்தியம்தான் ஏனெனில் கலிகாலத்தில் சாந்த சொரூப தெய்வங்களை விட உக்கிர வடிவில் உள்ள தெய்வங்களுக்கு சக்தி அதிகம்
ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி ஓம் அகிலத்தை ஆளும் அன்னையே போற்றி வராகி பற்றி நீண்டநாட்களாகவே எழுதவேண்டும் என்ற எண்ணம் இன்று சித்தர்கள் அருளாலும் கிரகங்களின் ஒத்துழைப்பாலும் வராகியின் அனுமதியாலும் சித்தியானது அடியேனுக்கு

ஜோதிடர் முகவரி

பிரேம்சந்த் நம்பிராஜன் செல்லிடப்பேசி 9789168398 சென்னை

About Author

error: Content is protected !!