February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வீரம்வெளஞ்ச மண்ணு துணிச்சலோடு போராடிய பெண்மணி

நெல்லைமாவட்டம், தென்காசியை அடுத்தகடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (70). இவரது மனைவி செந்தாமரை (65). இவர்கள், தங்களுடையதோப்பில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன்கள் வெளியூரில் இருப்பதால் இருவர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டின் வராண்டாவில் சண்முகவேலு சேரில் இருந்தபோது, முகத்தைத் துணியால் மறைத்தபடி2 கொள்ளையர்கள் வீட்டில் புகுந்தனர்.

ஒருவர், துணியால் சண்முகவேலின் கழுத்தை இறுக்கி கொலை.செய்ய முற்படுகிறார் இதனால், பெரியவர் சத்தமிட வீட்டுக்குள் இருந்த அவர் மனைவி வெளியே ஓடி வந்து சமயோசிதமாக செருப்பு, நாற்காலி, உள்ளிட்டவற்றைத் தூக்கி எறிந்து, அந்தக் திருடர்களை விரட்ட முயல
ஒருவன் பெண்ணின் கழுத்தில் இருந்தநகையைப் பிடித்துஇழுத்துவிட்டார். இதைத் தடுக்க முயன்றபோது, அவரின்கையில்A அந்த நபர் அரிவாளால் வெட்டினார். இருப்பினும் செந்தாமரை துணிச்சலுடன் போராடினார்.

சண்முகவேலுவும் நாற்காலிகளைத் தூக்கி கொள்ளையர்களை நோக்கி வீசினார். வயதான தம்பதி இருவரும் துணிந்து போராடி, முகமூடிக் திருடர்களைவிரட்டியடித்தனர்.

பின்னர், இதுகுறித்து கடையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவம் சண்முகவேல் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவுகளைக் கொண்டு, கொள்ளையர்கள் யாரென போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இருவரும் அரிவாளைக் காட்டி மிரட்டியும், துணிச்சலுடன் அவர்களை எதிர்கொண்டு தம்பதியர் விரட்டியடித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
காவல் துறையின் வேண்டுகோள் ஒன்றுதான் முடிந்தவரை அனைவரின் வீடுகளிலும் கண்காணிப்பு காமிரா மாட்டுங்கள் என்பதே

About Author

error: Content is protected !!