May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் -தென்காசி மாவட்ட அரசு தலைமை காஜி வேண்டுகோள்

முஸ்லிம்கள் வீடுகளில் தொழுது கொள்ள தென்காசி மாவட்ட அரசு தலைமை காஜி முகைதீன் அப்துல் காதர் அன்சாரி ஹஜரத் வேண்டுகோள்

தென்காசி மாவட்ட தலைமை காஜி மொய்தீன் அப்துல் காதர் அன்சாரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், மற்றும் கடையநல்லூர் தாசில்தார் ஆகியோரின் கோரிக்கையின் படி உலகில் நினைவிருக்கும் கொரானொ வைரஸின் காரணமாக 21/ 3/ 2020 சனிக்கிழமை முதல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் கூட்டாக ஜமாஅத் தொழுகைக்காக மக்கள் கூட வேண்டாமெனவும் தம் தமது இருப்பிடங்களில் தொழுது கொள்ளுமாறு அரசு அறிவித்திருக்கிறது எனவே இனிமேல் தொழுகை அழைப்புகளில் (பாங்கில் )வீட்டில் தொழுது கொள்ளுமாறு கூறப்படும் எனவே பள்ளிவாசல்களில் ஐந்து வேளை தொழுகை நடைபெறும் போது தொழுகை நடத்தும் இமாம், தொழுகை அழைப்பாளர் (முஅத்தின்) மற்றும் ஊழியர்கள் மட்டுமே பள்ளிவாசலில் இருப்பார்கள் .

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தொழுகையை விரைவாக முடித்து விடுமாறு அறிவுறுத்தப்படுகிறது

பள்ளிவாசல் நிர்வாகிககள், ஜமாத்தார்கள் அனைவரும் இதனை கடைபிடித்து ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகிறேன்

குறிப்பாக பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அனைவருமே பள்ளிவாசலுக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது அரசின் மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் மேலும் இந்த தகவலை மக்களுக்கு தெரிவிக்கும் படி பள்ளிவாசல்களில் அறிவிக்குமாறு வேண்டுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!