May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வி.ஏ.ஓ., சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் சங்க நிறுவனர் போஸ் கோரிக்கை

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தை கட்டுப்படுத்தி உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் சங்க நிறுவனர் போஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் 1984ல் மதுரையில் பதிவாகி, ஐந்து முறை தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனை பதிவாளர் அலுவலகம் ரத்து செய்து விட்டதாக தெரிவித்ததால், சென்னை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கியது. இந்நிலையில் 2008ல் தேர்தலில் முறைகேடுகள் நடத்தது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.


இதனையடுத்து சங்கத்தில் இருந்து சிலரை நீக்கி விட்டதாக அறிவிக்கப்பட்டு 2011ல் தேர்தல் நடந்ததாக அறிவித்தனர். அதன்பிறகும் சிலர் நீதிமன்றம் சென்றால் இதுவரை தேர்தல் நடக்கவில்லை. சங்க கட்டிடம் யாருடைய பயன்பாடுமின்றி பூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓய்வுபெற்ற சங்க பொதுசெயலர், தனக்கு வேண்டியவர்களை பொறுப்பாளர்களாக நியமித்து செயல்பட்டு வருகிறார்.
வி.ஏ.ஓ., சங்கம் மூன்றாக செயல்படுகிறது.
அனைத்து சங்கங்களும் ஓரிணைந்து தேர்தலை சந்தித்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுவரை நடிகர் சங்கத்தை பதிவாளர் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது போல, வி.ஏ.ஓ., சங்கத்தையும் பதிவாளர் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
இதுகுறித்து, பணிகள், நிர்வாக சீர்திருத்ததுறை அமைச்சர் ஜெயகுமார், பதிவுதுறை தலைவர் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

error: Content is protected !!