July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க திமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை

விவசாய பணிகள் தடையின்றி நடக்க அடையாள அட்டை வழங்க வேண்டும் மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் ஆட்சியருக்கு கோரிக்கை மனு
இதுகுறித்து இன்று தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு தென்காசி திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அளித்துள்ள கோரிக்கை மனுவில்

தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள் விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் ஆவார்கள். இந்த ஊரடங்கு காலத்திலும்கூட விவசாயம் செய்வதற்க்கு தடையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போதோ, வரும்போதோ, மார்க்கெட்டிற்கு காய்கறிகளை கொண்டு ,

காவல்துறையினரால் அவர்கள் வைத்திருக்கும் வாகனம் கைப்பற்றப்பட்டுவிடுகிறது. பிறகு உரிய வாகனம் அவர்களிடம் கொடுக்கப்படாமல் காவல்நிலையத்தில் நிறுத்திவைக்கப்படுகிறது. சிலவாகனங்கள் அபராதம் விதிக்கப்பட்ட பின்னரும் உரியவரிடம் ஒப்படைக்கப்படாமல் இருக்கிறது.

இதனால் விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அருள்கூர்ந்து விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கினால் நன்றாக இருக்கும் விவசாய பணிகளும் தடையின்றி நடக்கும்
ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்களை உரியவர்களிடம் வழங்கிடுமாறு உத்தரவு வழங்கிடவும் , விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அடையாள அட்டைகள் வழங்கி விவசாயத்தை காத்திட வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த கோரிக்கை மனுவில் குறிபிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!