June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விழாக்கள் எதற்காக …பிறர் வருத்தம் கொள்ளவா ?

அண்மையில் வளர்ந்து வரும் தொழிலதிபர் ஒருவரின் மகன் திருமணம் விழாவிற்கு சென்றிருந்தோம் மண மக்களை வாழ்த்த பெரிய வரிசை ,விழா நடைபெற்றதோ பெரிய நகரம் என்பதால் கூட்டம் வேறு அதிகமாக இருந்த்தது ,சரி என வரிசையில் நின்றோம்
மண மேடை ஏறியதும் இருவர் வழி மறித்து சிலரிடம் மட்டும் ஏதோ மணமக்களை பார்க்க அனுமதித்தனர் ,சிலர் வரிசையில் நிற்கவில்லை அது சிறப்பு தரிசனம் போல ,நானும் மேடை அருகே சென்றேன் என்னை இடைமறித்து மணமக்களை தொடக் கூடாது பார்த்துவிட்டு அப்படியே போகணும் என்றார்கள் கையை பிடித்தார்கள் ,எனக்கு சொன்னதில் கூட வருத்தமில்லை என் கையை பிடித்ததும் கையை விடுங்க நீங்க யார் இதை சொல்ல என்று அவர்களைகண்டு கொள்ளவில்லை சொன்னவர் கொஞ்சம் கலங்கிப் போனார்
அவரிடம் ஏன் அப்படி சொன்னீங்க என்றேன் எங்களுக்கு அப்படி சொல்ல சொல்லி சொல்லியிருக்கிறார்கள் ,நீங்க ஏதும் நினைக்க வேண்டாம் என்றார் ,அதுசரி எய்தவன் இருக்க அம்பை குறை சொல்லி என்ன செய்ய என்று மேடை வரை வந்துவிட்டோம் ஒரு வாழ்த்து சொல்லிவிடலாம் என அங்கிருந்து நகர்ந்தேன் ,மணமக்களும் அப்படிதான் சிலர் வந்தால் எழுந்துநின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்
,ஒரு சிலரை கண்டு கொள்ளவே இல்லை ,அருகில் இருப்பவர்கள் நம்மை இழுத்து அந்தப்பக்கம் தள்ளிப்போக சொல்லிக்கொண்டு இருந்தனர் ,பலரும் மனம் வருந்தும் படி நடந்துகொண்டனர் , திருமண விழாவுக்கு எல்லோரையும் அழைப்பதே மணமக்களை மனதார வாழ்த்தத்தான் அந்த சம்பரதாயங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் இப்படி செய்வதற்குப் பதில் நீங்கள் விரும்பம் நபர்களை மட்டுமே அழைத்து இருக்க வேண்டும் ,
அதே போலத்தான் சாப்பிடும் இடத்திலும் சிலைரை அங்க போங்க ,நீங்க அந்தபக்கம் போங்க என்று ஒரு குழு பிரித்து அனுப்பும் பணியை சிறப்பாக செய்து கொண்டு இருந்தார்கள் ,அவர்கள் செய்கையைப் பார்த்ததும் சாப்பிடாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டோம் ,
திருமணம் என்பது எல்லோரும் மகிழ்வோடு வந்து விருந்துண்டு வாழ்த்துவதே அதை புரிந்து கொண்டு விழா நடத்துங்கள் ,உங்களிம் பணம் பெரிய நபர்கள் பழக்கம் இருந்தால் அது உங்களோடு இருக்கட்டும் ,பணம் சம்பாதிக்க தெரிந்த உங்களுக்கு மனிதர்களை சம்பாதிக்க தெரியவில்லையே

About Author

error: Content is protected !!