July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு கோட்டாட்சியர் அலுவலகம் எம்.எல்.ஏ இன்பதுரைகோரிக்கை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட பிரிவினை அடிப்படையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியங்கள் திருத்தி அமைக்க கடந்த மாதம் முதல் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது அதில் பெறப்பட்ட கருத்துக்கள் மீதான பரிசீலனைகருத்து கேட்பு கூட்டம் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பேசியதாவது :-
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசூர் பஞ்சாயத்தை அம்மக்களின் கோரிக்கைக்கேற்ப மிக அருகிலுள்ள திசையன்விளை பேரூராட்சியுடன் இணைத்து திசையன்விளையை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
அதேபோல வள்ளியூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

செட்டிகுளம் கூடங்குளம் ஆகியவை அணு உலை மையம் அங்கு வந்த பின்பு அங்கு வசிக்கும் பொதுமக்கள் பணியாளர்கள் தொழிலாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே கூடன்குளம் செட்டிகுளம் ஊராட்சிகளை பேரூராட்சி ஆக மாற்ற வேண்டும் மேலும் வள்ளியூரில் மாவட்ட மருத்துவமனை அமைக்க வேண்டும்.

அயல்நாடுகளில் அதிகமாக பணிபுரியும் நெல்லை குமரி மாவட்ட மக்கள் வசதிக்காக ராதாபுரம் பகுதியில் புதிய விமானநிலையம் அமைக்க மத்தியஅரசுக்கு பரிந்துரைக்கவேண்டும்.

செய்தி;-  டேவிட்ராஜா திருநெல்வேலி 

About Author

error: Content is protected !!