February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வல்லரசு தேசத்தை உருவாக்குவோம் வாருங்கள்-கல்வியாளர் இராஜசேகரன்

பன்முகத் தன்மை கொண்டவரும் கல்வியாளரும் ,மனிதவள மேம்பாட்டு ஆலோசகருமான இராஜசேகரன் குழந்தைகளின் மனதை நன்கு படித்தவர் , குழந்தைகளை பெற்றோர் அணுகும் முறை பற்றியும் இந்த கொரொனா சமயத்தில் சமூக விலகல் நேரத்தில் பெற்றோர்களும் என்ன செய்ய வேண்டும் சொல்லியிருக்கிறார்

குழந்தையை நேசிக்கும் ஒவ்வொரு பெற்றோரும் வாசிக்க வேண்டிய சரியான நேரம்

குழந்தைகளின் மனங்களை கட்டமைக்கும் பணியை தொடங்க சரியான தருணம்!

அன்பிற்க்கினியவர்களுக்கு வணக்கம்….

இந்திய தேசம் முழுவதும் கொரனா வைரஸ் உக்கிர தாக்கம் உச்சத்தில் இருக்கிறது.. நகர மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு கிராம மக்களிடம் ஏற்படவில்லை என்ற வருத்தம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மருந்து கண்டுபிடிப்பில் தீவிரம்

கொரனாவைரஸ் தீவிரத்தை கட்டுப்படுத்தும் மூன்று வகையான மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் முதல் வார இறுதியில் மருந்து கண்டுபிடித்த செய்தி எல்லோரையும் வந்தடையும். அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் கடுமையான ஊரடங்கை கடைபிடிப்பதன் மூலமே நம் எதிர்கால வாழ்வியில் கட்டமைப்பை நிர்மானிக்க முடியும் .

தலைமுறை வரலாறு

ஒவ்வொறு இல்லங்களிலும் குடும்ப வரலாறு பற்றி ,வயதில் இளவல்களுக்கு எடுத்துச் சொல்லும் மிகச்சிறந்த நேரமாக இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நம் ஒவ்வொரு குடும்பமும் ஏழ்மை ,வறுமை ,உதவியின்மை ,கடின உழைப்பு என மிக நீண்ட தனி ஆளுமையை தாண்டி நீண்ட நெடிய பயணத்தில் இன்றைய நிலையை அடைந்திருக்கும். இந்த நிலைய அடைய ஒவ்வொறு மூத்த உறுப்பினர்களிடமும் நம் வம்ச 100 ஆண்டு வரலாற்று தகவல்கள் இருக்கும். இது இளவல்களோடு பகிர்ந்து கொள்ள நேரமில்லாமல் இருந்திருக்கலாம். அல்லது இளையோர்கள் கேட்டு தெரிந்துகொள்ள பொறுமை இல்லாமல் இருந்திருக்கலாம்..நம்மை புரிய வைப்பதற்க்கு இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அணையா விளக்கை ஏற்றிவையுங்கள்

வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை இல்லங்களில் வழிபாட்டு பகுதியில் தீபத்தை ஏற்றிவையுங்கள். அந்த ஒளிக்கு அதீத சக்தி இருக்கிறது. குளியலறையில் குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வையுங்கள் அது மனநிலையை சமன்செய்து உங்களோடு பயணிக்க வைக்கும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும், நொறுக்கு தீனிகளையும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்மல்ல குழந்தைகள் உண்பதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் . திரவ உணவு உண்பவர்களை வைரஸ் அதிக அளவில் தாக்குவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. திட உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். பள்ளிகளில் இயற்கை உணவுத் திருவிழா நடைபெறும்போது குழந்தைகளின் பெற்றோர்கள் என்னென்ன உணவுகள், நொறுக்கு தீனிகள் தயாரித்து காட்சிப்படுத்துவார்களோ அதை வீடுகளில் தயாரித்துக் கொடுங்கள். குழந்தைகள் சாப்பிட்டு பழக்கப்படட்டும் .வீடுகளின் உணவுப் பட்டியலில் தினமும் இவை இடம்பெறட்டும்.

தவிக்க வேண்டியவை

தொலைக்காட்சிகளிலும் ,சமூக வலையதளங்களிலும் காட்சிப்படுத்தப்படும் கொரானா பற்றிய கொடூர வீடியோ தகவல்களை குழந்தைகளிடம் எக்காரணம் கொண்டும் காட்டவேண்டாம். தொலைக்காட்சி தொடர்களின் நெடுத்தொடர்கள் வன்மத்தை தூண்டி எதிர்மறை எண்ணங்களை விதைத்து சமூக சீரழிவுக்கு வழி வகுத்ததோ அதேபோல் குழந்தைகளின் மனங்களை இந்த காட்சிகள் முடக்கி விடும். ஆன்மிகப் பாடல்கள் ,அறம்சார்ந்த கருத்துக்கள் ,நகைச்சுவை திரைப்படங்கள் ,வாய் விட்டு சிரிக்கும் நிகழ்வுகளை அரங்கேற்றுங்கள். மன அழுத்தம் ,தைரியமின்மை ,கவனக்குறைவு ,நினைவாற்றல் இழப்பு ,உடல் பலகீனம் இவைபோன்ற பாதிப்புகள் தொற்றுநோய்கள் தாக்கி குணமானவர்களை விட்டு வெளியேறுவதில்லை எனவே தொற்றுநோய் தொடாத பாதுகாப்பு அவசியம்

பழக்கப்படுத்த வேண்டியவை

நிச்சயமாக ஒவ்வொரு இல்லங்களிலும் தாய் அல்லது தந்தை நிச்சயமாக யோகா பற்றிய புரிதல் இருக்கும் குழந்தைகளுக்கும் பள்ளியில் யோக பயிற்சி கொடுத்திருப்பார்கள் எந்த ஒரு தொற்றுநோயும் உடலின் முக்கிய உறுப்புகளான இருதயம் நுரையீரலை தொட்டுப்பார்க்க ஆசைப்படுகிறது அதை தடுக்க தியானம் ,மூச்சுப்பயிற்சி ,யோகா ,சுவாசம் அறிதல் ஆகியவையே மிகவும் கை கொடுக்கின்றன.. இருதயும் நுரையீரலும் முறையாக பயணிக்க இவை முன்னெடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் செயல்களை உன்னிப்பாக கவனித்து பின் பிரதிபலிப்பார்கள். உதாரணமாக சிவாஜி கணேசன் கே.ஆர் விஜயா நடித்த சொர்க்கம் திரைப்படத்தை திரும்ப ஒருமுறை பாருங்கள் . நம்மை தயார்படுத்திக்கொள்ள உதவும்.

சந்திக்க வேண்டிய சவால்கள்

வருங்காலம் உலகளாவிய போட்டிக்கான களத்தை தயார்படுத்தி வருகிறது அறிவுச் சந்தை எல்லையில்லாமல் விரிவினடந்துகொண்டே செல்கிறது. தொழில்நுட்பமும் அறிவுசார் ஆற்றலுக்கான போட்டியும் பருந்தை விட உயரத்தில் பறக்கிறது. இவைகளுக்கு ஈடுகொடுக்க மனங்களை கட்டமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் கல்விக்கூடங்கள் ,அரசின் பல்வேறு சமூகநல துறைகள் ,தொண்டுநிறுவனங்கள் ,சமூக மேம்பாட்டு வல்லுநர்கள் ,அவர்கள் சார்ந்த குழுக்கள் களம் காணவேண்டும். பள்ளி மாணவர்களின் மனங்களில் ஆரம்ப நிலையிலிருந்து குழந்தைகளின் அறிவுத்திறன் ,ஆக்கத்திறன் ,படைப்பாற்றல் ,விவாத மேலாண்மை ,விமர்சன சிந்தனை ,பகுப்பாய்வு பண்பு ,அடிப்படை வாழ்வியல் திறன் பற்றிய கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் .

இவையே பிரச்சனைகளில்ல கட்டமைப்பான வல்லரசு தேசத்தை உருவாக்கும் .
இவை ஒவ்வொறு வீட்டில் இருந்தும் தொடங்கட்டும்

 

About Author

error: Content is protected !!