May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பிரபாகரன் IAS

வரதட்சணை கேட்ட உதவி கலெக்டர் அதிர்ந்து போன பெண் வீட்டார்

கடந்த பிப்ரவரி 26 அன்று பேராவூரணி யில் நடைபெற்ற திருநெல்வேலி துணை ஆட்சியர் த சிவகுரு_பிரபாகரன் IAS அவர்களின் திருமண விழா தான் அப்படியொரு வர தட்சணை கேட்டது

சிவகுரு பிரபாகரன் IAS

அவர் கேட்ட வரதட்சணை என்ன தெரியுமா
பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல சிரமங்களுக்கு இடையே படித்து ஐஏஎஸ் அதிகாரியான இவர் இவருக்கு திருமணம் செய்ய நினைத்த நேரத்தில் படித்த பெண்களும் IAS,IPS,IRS,படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும்,ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார்..

இதை மனதில் கொண்டு அவர்களுடைய பெற்றோர்கள் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்த நிலையில் பல மருத்துவம் படித்த பெண்கள் கிடைத்தும்,

இவருடைய நிபந்தனைகளை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.. கடைசியாக சென்னைநந்தனம்_கல்லூரியில் கணித பேராசிரியரின் மகள் செல்வி.Dr_கிருஷ்ணபாரதி MBBS என்பவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்த பின் திருமணம் நடந்தது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், அவருடைய #நிபந்தனை தன்னை திருமணம் செய்துகொள்ளும் மருத்துவர் வாரத்தில் இரண்டு நாள்..தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும் இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதையே நிபந்தனையாகும்

வரதட்சனை யாகவும் இவர் கேட்டதே…திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருக்க தற்பொழுது இவர் கேட்ட வரதட்சணையை கொடுத்து மணமகள்

திருமதி கிருஷ்ணபாரதிசிவகுரு பிரபாகரன் ஆகி உள்ளார்கள் இக்காலத்திலும் இப்படி ஒரு அதிகாரி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது,

அதுவும் டெல்டா பகுதியில் விவசாய குடும்பத்தை சார்ந்த ஒருவர் நேர்மையாய்,மக்கள் மீது அன்பு கொண்டவராய் இருப்பவர் என்பதில் பெருமைப்படுவோம்
இவர் தான் எங்க மாவட்ட ஆட்சியராக வர வேண்டும் என்று பொதுமக்கள் போராடாமல் இருந்தால் சரிதான்
இந்த லட்சிய தம்பதிகள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்

About Author

error: Content is protected !!