February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

லஞ்சம் வாங்கிய வேலூர் மாவட்ட தனித்துணை ஆட்சியர் கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தினகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் காரில் துரத்தி பிடித்தனர்
கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இடம் மற்றால் செல்லாமல் தொடர்ந்து அதே இடத்தில் பணியாற்றிய நிலையில் கைதானார், தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகேயுள்ள இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் விவசாயியான இவர் தனது தந்தை முருகன் மற்றும் அத்தை மகன் ராஜவேலு ஆகியோர் பெயரில் இருக்கும் 1.47 ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த ஆண்டு கண்ணமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதற்காக அரசின் நில வழிகாட்டு மதிப்பின்படி பத்திரங்களை வாங்கி பதிவு செய்துள்ளார்.ஆனால், இந்த முத்திரை கட்டணம் குறைவு எனக்கூறி கண்ணமங்கலம் சார் பதிவாளர் மணிகண்டன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேல் முறையீட்டுக்காக வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியருக்கு அனுப்பியுள்ளார். மேலும், நிலத்துக்கான பத்திரத்தையும் அவர் ரஞ்சித்குமாரிடம் கொடுக்காமல் இருந்துள்ளார்
இதனிடையே குறை முத்திரைக் கட்டணம் புகார் தொடர்பாக ரஞ்சித் குமாருக்கு வேலூர் மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை ஆட்சியர் தினகரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தினகரனின் அலுவலகத்துக்குச் சென்ற ரஞ்சித் குமார், குறை முத்திரைக் கட்டணம் புகார் குறித்துப் பேசியுள்ளார்.
அப்போது இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து பத்திரத்தை தர ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார் தினகரன்

இந்த நிலையில் தினகரன், வேலூர் மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு அலுவலராக கடந்த ஜனவரி மாதம் இறுதியில் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அந்த பதவிக்குச் செல்லாமல் இதே பதவியில் தொடர்ந்துள்ளார். மேலும் குறை முத்திரைக் கட்டணம் தொடர்பாக வரப்பெற்றுள்ள புகார் மனுக்களின் நிலுவையில் உள்ள கோப்புகள் அனைத்தையும் விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவந்துளார்
இந்த வேலைகளை முடிக்க தனது கார்டிரைவர் ரமேஷ்குமார் என்பவர் மூலமாக எல்லோரயும் செல்போனில் தொடர்புகொண்டு நிலுவையில் இருக்கும் கோப்புகளை முடித்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். ரஞ்சித் குமாருக்கும் இதே தகவலை டிரைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தினகரனை சந்தித்து தனது பிரச்சினையை முடிக்க ரஞ்சித் குமார் சொல்லியுள்ளார் .பணத்தை கொடுத்தால் முடித்து விடலாம் என அவர் சொல்ல ரூ.50 ஆயிரம் பணத்தைக் கொடுக்க ரஞ்சித்குமார் சம்மதித்துள்ளார் . இந்நிலையில் மனம் மாறிய ரஞ்சித்குமார் வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்
அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனுப்பி அவரை பின்தொடர்ந்தனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பணத்தை கொடுக்க ரஞ்சித்குமார் போனபோது . அலுவலகத்தில் அவர் இல்லை. செல்போனில் தொடர்புகொண்ட போது ஆய்வுக்காக சென்றிருப்பதால் வருவதற்கு தாமதமாகும் என சொல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகேயுள்ள ஏடிஎம் மையம் அருகில் காத்திருக்கும்படி தினகரன் கூறியுள்ளார்.

நேற்று சொந்த காரில் ஓட்டுநர் ரமேஷ்குமாருடன் வந்த தினகரன், பணத்துடன் காத்திருந்த ரஞ்சித் குமாரை தனது காரில் ஏற்றிக்கொண்டார். இதைப் பார்த்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அந்த காரை பின்தொடர்ந்து.பணத்தை தினகரன் வாங்கிவிட்டார் என்பதை ரஞ்சித் குமார் மூலம் போலீஸார் உறுதி செய்துகொண்டதும் அவரர் சென்ற காரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமார் 3 கி.மீ். தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
காருடன் அவரை அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி தலைமையில் விசாரணை நடைபெற்றது. மேலும், தினகரனின் காரை சோதனையிட்டதில் ரஞ்சித் குமாரிடம் வாங்கிய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் கணக்கில் வராத பணம் மொத்தம் ரூ.2.44 லட்சம் இருந்தது தெரியவந்தது. இந்தப் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், தனித்துணை ஆட்சியர் தினகரன் மற்றும் அவரது ஓட்டுநர் ரமேஷ்குமாரையும் கைது செய்தனர்.

About Author

error: Content is protected !!