July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரேசன் கடைகளில் ஆய்வு மேற்க்கொண்டார் தென்காசி ஆட்சியர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் குலசேகரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளில் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் ஆய்வு செய்தார்

ஆய்வின்போது நியாய விலை கடையில் அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ,மற்றும் டோக்கன் வழங்கும் முறைபொருட்களின் தரம் மற்றும் எடை குறித்து ஆய்வு மேற்கொண்டார் , மேலும் சமூக விலகல் குறித்து பொதுமக்கள் மற்றும் கடைக்காரரிடம் விளக்கி கூறினார் கடைகளில் பொதுமக்கள் கை கழுவ சோப்பு ,மற்றும் கைகழுவப் பயன்படுத்தும் திரவம் வைத்துள்ளார்களா ? மேலும் அதை கடைக்காரர் மற்றம் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்களா ?  என்று கேட்டறிந்தார் , பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் கடைகள் சுத்தம் செய்த நாள் மற்றும் , கிருமி நாசினி தெளிக்கப்பட்டதா ?

என கேட்டறிந்தார் மேலும் பொதுமக்களிடம் கொரொனோ மற்றும் பரவல் தடுப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் விலையும் அதிகரித்து உள்ளதா ? என்று கடைக்கு வந்த பெண்மணியிடம் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விலை விவரம் குறித்து கேட்டறிந்தார் , மேலும் கொரொனோ தொற்று எவ்வாறு பரவுகிறது அதை தடுக்கும் விதமாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற விவரங்கள் குறித்து கேட்டு ,அது குறித்து தென்காசி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் தயாரிக்கப்பட்ட துண்டறிக்கையை விநியோகித்தார் பின்னர்

பாவூர்சத்திரம் தினசரி காய்கறி மார்க்கெட் சென்று அங்கு காய்கறியின் விலை விவரம் குறித்து கேட்டறிந்தார் எந்தெந்த பகுதியில் இருந்து காய்கறி வருகிறது காய்கறிகள் கொண்டு வருவதில் ஏதும் சிரமம் உள்ளதா ? மேலும் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதும் தடை இருப்பின் அது குறித்து சொல்லுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்தார் , மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்கிற விபரம் குறித்தும் கேட்டறிந்தார் , கூட்டமாக இருந்த கடைகளில் சமூக விலகல் முறை குறித்து விவரித்தார் மேலும் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் வரும்போது கைகழுவ உரிய கை கழுவும் திரவம் தண்ணீர் உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

About Author

error: Content is protected !!