June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ராணிபேட்டை மாவட்டத்தில் சாராயதொழிலை விட்டு திருந்திய நபர்கள்

52 நபர்கள் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருந்தி வாழ உறுதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாம்பசிவபுரம் மற்றும் அதன் சுற்று கிராமங்களில் உள்ள சில குடும்பங்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சிவிற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் திருந்தி வாழ 22.01.2020ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று 28.01.2020ம் தேதி சாராய ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களில் இருந்து 52 நபர்கள் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருந்தி மறு வாழ்வு வாழ உறுதி கொண்டதின் பேரில் அவர்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தொழில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்படும் மேலும் கிராமங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நன்றாக படித்து அரசு மற்றும் தனியார் வேலைக்குச் செல்ல உரிய துறைகளின் ஒத்துழைப்போடு உதவி செய்யப்படும் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதற்காக நூலகம்,விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்தார்

About Author

error: Content is protected !!