May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரஜினி முடிவைப் பார்த்த திருச்சி ரசிகர் அதிர்ச்சியில் மரணம்

இன்று  சென்னையில் ரஜினிகாந்த் சென்னையில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார்  என பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட  நிலையில் அவரின் அறிவிப்பு பெரிதும் பலருக்கும்  அதிர்ச்சியை தந்தது  இந்நிலையில் திருச்சி மணப்பாறையை சோ்ந்த பாபா.முருகேஷ். தீவிர ரஜினி ரசிகரான இவா் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளராக உள்ளாா். இவருக்கு லதா என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும் உள்ளனா். நேற்று மணப்பாறையில் நடந்த சிறிய விபத்தில் காயமடைந்த முருகேஷ் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது இன்று காலை 11 மணியளவில் ரஜினியின் பிரஸ் மீட்டை தனது செல்போனில் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென முருகேஷிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு மருத்துவா்கள் அவசர சிகிச்சை அளித்துள்ளனா். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவா் உயிாிழந்தாா். ரஜினி ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

error: Content is protected !!