May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரஜினியை சந்தித்த ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர்

இன்று சென்னையில் ரஜினியை சந்தித்த ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் நடிகர் ரஜினியை சந்தித்தார்

சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினியை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் சந்தித்து பேசினார். பின்பு அபூபக்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மரியாதை நிமித்தமாகவும், நன்றி தெரிவிக்கவே ரஜினியை சந்தித்தேன். பொது பிரச்னைகள், குடும்ப நலன் குறித்து விவாதித்தோம். அவர் எனது குடும்ப நண்பர். ரஜினிக்கு மத வேறுபாடு கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். பல விஷயங்களை பரிமாறி கொண்டோம். முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தால், முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றார். இது முஸ்லிம்கள் மனதில் அழுத்தமான நம்பிக்கையை கொடுத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கவும், டில்லி கலவரத்திற்காக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் சந்தித்தேன். இதில் எவ்வித அரசியலும் இல்லை.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து . அனைத்தும் அவருக்கு தெரியும். ஹிந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் எல்லாரும் ஒரே நாட்டு மக்கள். ஒரே தொப்புகள் கொடி உறவுகள். நமக்குள் பாகுபாடு கூடாது. பொருளாதாரத்தில், இந்தியா சிறப்பாக வர வேண்டும் என்பது தான் ரஜினியின் சிந்தனையாக உள்ளது. என தெரிவித்தார்

இதனிடையே நடிகர் ரஜினிகாந்துடன், காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் சந்திப்பு
தனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி கூறியதாக தகவல் அண்மையில் நடந்த துக்ளக் விழாவில், முரசொலி மற்றும் திக குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு காரணமாக அவருக்கு எதிர்ப்பு வந்த நிலையில் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டது ரஜினியின் கோரிக்கையை ஏற்று, பாதுகாப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

About Author

error: Content is protected !!