June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

யானையை பார்த்தால் ஆசிர்வாதம் வாங்கிடுங்க

எல்லோருக்கும் இருக்கும் ஒரே மனக் குறை பணப் புழக்கம் தான் கையல காசே தங்க மாட்டேங்குது என்கிற எண்ணம் இருக்கும் அவர்களுக்கு இதோ ஒரு எளிய வழி

குருவே சரணம் குருவே வா குருவருள் தா யானை குருகாரகத்துவம் யானையிடம் ஆசீர்வாதம் வாங்குதல் குருபரிகாரம் குருதோஷம் குருசாபம் நீங்கும் பணபுழக்கம் ஏற்படும் கர்மவினைகள் தாக்கத்தை குறைக்கும் நீங்கள் வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும்.அடிக்கடி யானையை பார்த்து வருவது நல்லது.

யானை அசைந்து வருவதை பார்ப்பது அழகு.யானை சாத்வீகமான பிராணி விலங்கு.நன்கு யோசித்து பாருங்கள் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் நிறைய கோயில்களுக்கு யானையை தானமாக வழங்குவார் அல்லது அதை வளர்ப்பார் யானை குதிரை பசு மாடுகள் தானம் கோயில்களுக்கு அல்லது அந்தணர்களுக்கு கொடுப்பது நல்ல பலன்களை தரும்.அவரவர் வசதிக்கேற்ற விஷயங்களை செய்து கொள்ள வேண்டும்.

யானை மிகவும் அற்புதமான விஷயங்களை நமக்கு சொல்லி கொடுக்கும்.கீழ்படிதல் யானையிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.பாகனின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு யானை தன் எஜமானனின் கட்டளைகளை அடிபணியும்.ரத கஜ துரக்க பதாதிகளில் கஜ என்றால் யானைப்படையாகும் கஜமுகன் பிள்ளையார் அம்சம் யானை
நமது சிறு பிராயத்தில் யானைகள் வீதி உலா வருவதுண்டு.சின்ன வயதில் யானை மீதேறி அமர்ந்து இருக்கும் வாய்ப்பு நிறைய தடவை நிகழ்ந்துள்ளது ஜோதிடத்திலுள்ள யோகங்களில் கஜகேசரி யோகம் மிக சிறப்பாக பேசப்படும் கஜம்=யானை கேசரி=சிங்கம் யானை±சிங்கம் பலம் கொண்டு அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்ய கூடிய ஆற்றல் கஜகேசரி யோகம் கொண்டவருக்கு இருக்கும்.

பெரிய உருவத்திலுள்ள மிருகம் சிறுகுழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.அடியேனின் பரிகாரங்களில் யானையை தினமும் பார்த்தல் ஆசீர்வாதம் வாங்குதல் முக்கியமான அம்சமாகும்

About Author

error: Content is protected !!