March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மெயின் ரோட்டுக்கு வாம்மா என அழைப்பு விடுத்ததை அமைச்சர் மறந்துவிட்டாரா ?ம.நீ.ம பொன்னுசாமி

தன் முதுகில் ஆயிரம் டன் அழுக்கை வைத்துக் கொண்டு நம்மவரை இழிவுபடுத்துவதா….?”
-அமைச்சர் ஜெயக்குமாருக்கு மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி கடும் கண்டனம்.தெரிவித்துள்ளார் அதில்

நேற்றைய தினம் சென்னை மாநகராட்சி மூலம் எங்களது தலைவர் நம்மவர் மீது சேற்றை வாரி இறைக்க நினைத்து தோற்றுப் போன தமிழக அரசு தலை குப்புற கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என சப்பைக்கட்டு கட்டும் வகையில் அதே மாநகராட்சி மூலம் “தெரியாம நடந்துடுச்சு” “சின்ன தவறு தான் விட்டுடுங்க., வலிக்குது…” என சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்லி வருகிறது.

இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் “என்ன சார் திடீர்னு கமல்ஹாசன் சார் வீட்லயும் கொரானா ஸ்டிக்கர் ஒட்டிட்டீங்க. எல்லோரும் பதறிப் போய்ட்டாங்கல்ல” என கேள்வி கேட்க அதற்கு “அவரே ஒட்டச் சொல்லியிருப்பாரோ என்னவோ..?” என பொறுப்பற்ற பதிலை சொல்லி நக்கலாக சிரிக்கும் இவரையெல்லாம் அமைச்சராக பெற தமிழக மக்கள் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை…?

அதுமட்டுமின்றி செய்தியாளர் சுவரொட்டி ஒட்டப்பட்ட வீடு கட்சி அலுவலகமாயிற்றே என அடுத்த கேள்வியை கேட்க அதற்கு இரட்டை அர்த்தத்தில் குலுங்கி, குலுங்கி சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறார்.

கடந்த ஆண்டு இவரிடம் தொலைபேசியில் பேசிய பெண்ணிடம் “மெயின் ரோட்டுக்கு வாம்மா” என அழைப்பு விடுத்த இவரது கணீர் குரல் தொலைபேசி உரையாடல் நமது செவிகளை விட்டு இன்னும் அகலாத சூழ்நிலையில் தற்போது நம்மவரை தவறாக சித்தரிக்க முயன்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம், தன் முதுகில் ஆயிரம் டன் அழுக்கை வைத்திருக்கும் இவர் இது போன்ற ஈனச்செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்கள் போட்ட யாசகத்தில் அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு நம்மவரை இழிவுபடுத்த வேண்டும் என்றோ, அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்றோ நினைத்தால் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோருக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கும் தக்க பாடம் கற்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் அணி சார்பில் எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறோம்.என குறிபிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!