May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மூத்த பத்திரிகையாளர் ஏஎன்ஐ கோபிநாத் மறைவு

மூத்த பத்திரிகையாளர் ஏஎன்ஐ கோபிநாத் மறைவு
சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்
ஏ என் ஐ செய்தி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் திருமிகு. கோபிநாத் வயது 88 இன்று 08-06-2019 ) காலை 11.30 மணியளவில் இயற்கை எய்தினார். வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெரியவர் திரு. கோபிநாத் அவர்களின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் செய்திகளை சேகரித்தது முதல் எண்ணிலடங்கா பல மூத்த தலைவர்களை செய்தது, குறிப்பாக கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ , சேகுவேரா ஆகியோரின் நேர்காணல்கள் என்றைக்கும் பேசப்படும் . தமிழக பத்திரிகை உலகம் தனது மூத்த உறுப்பினரை இழந்து தவிக்கிறது. இந்த வருத்தமான சூழலில் பெரியவர் கோபிநாத் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரோடும் துயரத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் பகிர்ந்து கொள்கிறது.
அன்னாரது முகவரி:
ஏ.எம் 7, 12 வது பிரதான சாலை , அண்ணா நகர் ,சென்னை 600040.
இன்று மாலை 5.30 மணியளவில் வேலங்காடு மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

About Author

error: Content is protected !!