June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முழுமனதோடு கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள் -ஜோதிடர் பிரேம்சந்த் நம்பிராஜன்

அனைவருக்கும் வணக்கம் நடந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையை அனைவரும் புரிந்து கொண்டு தங்களுடைய தெய்வ நம்பிக்கையையும் ஆத்ம நம்பிக்கையையும் மறந்துவிடாமல் அச்சம் கொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே அனைவரும் ஒன்றாக இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

பொதுவாகவே இந்த மாதிரியான சூழ்நிலையில் முதலில் பயம் என்ற கோழைத்தனம் நம்மிடையே வரக்கூடாது ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஆனால் இதுபோன்ற தொற்றுநோயால் இறப்பதற்கு நாம் இந்த பூமியில் வரவில்லை என்பதை முழுமனதாக நினைப்பவர்கள் அனைவருமே இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளுங்கள்

வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களை பார்த்து இருக்கின்றோம் அதுபோல இந்த அசாதாரணமான சூழ்நிலையும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் நீண்டகாலமாகவே முகநூலில் இயங்கிக் கொண்டிருக்கும் அடியேன் நிறைய விஷயங்களை எளிய பரிகாரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் எப்பொழுதுமே எடுத்துக்கூறி கொண்டிருக்கின்றேன் அந்த வகையில் ஒரு அசாதாரணமான சூழ்நிலை நேரும் பொழுதெல்லாம் உங்களுடைய ஆன்ம பலத்தை மிகுந்த வீரியம் மிக்கதாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் பஞ்சாட்சர மந்திரமான ஓம் நமச்சிவாய மந்திரத்தை கடந்த இரண்டு வருடங்களாகவே முகநூலில் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கின்றோம் நாம் அனைவரும்.

அந்த மந்திரத்தின் நோக்கமே உலக மக்கள் நாட்டு மக்கள் ஊர் மக்கள் மாநில மக்கள் மாவட்ட மக்கள் இப்படி அனைத்து மக்கள் சார்ந்த விஷயங்களில் பேரிடர்கள் அல்லது இதுபோன்ற நோய்கள் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணக் கூடாது என்பது மட்டுமே நோக்கமாகும் கோடி நாம ஜெபம் எழுதிக்கொண்டிருக்கும் அனைவருமே ஒன்று திரண்டு இதுவரை ஆறு லட்சத்தை கடந்து நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்

எங்கிருந்தெல்லாமோ எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி கோடி இன்றைய காலகட்டத்தில் கொரோனோ வைரஸ் என்ற இந்த நோய் எப்படி வந்ததோ அதே போல மறைந்து விடும் என்று அனைவரும் முதலில் நினைக்க ஆரம்பியுங்கள் இந்த காலகட்டத்தில் முதலில் உங்கள் தெய்வபக்தி உங்களின் ஆன்ம சக்தி உங்களின் மீதுள்ள நம்பிக்கை ஒரு சர்வ வல்லமை மிக்கதாக மாற்றிக் கொள்ளுங்கள்

கிரகங்களின் சஞ்சாரம் தான் இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாக நேர்ந்துள்ளது இது கண்டிப்பாக நிரந்தரமான ஒன்றல்ல என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள் காற்று இராசியான மிதுனத்தில் ராகு அமர்ந்து இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற மர்ம நோய் வைரஸ் நோய் வருமென்று சென்ற வருட ஆரம்பத்தில் இருந்தே நிறைய தடவை நாம் சொல்லிக் கொண்டே இருந்தோம் அதுவும் சீனா மாதிரியான நாட்டிலிருந்து இந்த தொற்று நோய் பரவும் என்பதைப்பற்றிய விஷயங்களும் பதிவிட்டு இருந்தோம் மந்திரங்களாலும் உங்களுடைய எண்ணங்களாலும் எப்பேர்பட்ட மோசமான சூழ்நிலைகளையும் மாற்றியமைக்கக் கூடிய சக்தி உங்களிடமே இருக்கின்றது என்பதை முதலில் உணருங்கள்

பொதுவாகவே கூட்டுப் பிரார்த்தனை என்பதற்கு மிகுந்த சக்தி உள்ளது என்பதை நாம் நிறைய தடவை உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம் அதை புரிந்துகொண்டு இந்த காலகட்டத்தில் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் உலக மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்யுங்கள் இதில் ஜாதி மதம் இனம் மொழி நாடு நகரம் மாநிலம் மாவட்டம் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் ஒரு உயிருக்கு ஒரு உயிர் வேண்டுதல் அப்படிங்கிற அந்த விஷயத்தை அந்த நல்லெண்ணத்தை அடிப்படையாக கொண்டு வேண்டும் பொழுது பிரபஞ்சம் கண்டிப்பாக காதுகொடுத்து கேட்கும் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படும் நம்முடைய கூட்டுப்பிரார்த்தனை தொடர்ந்து மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் சுயநலம் இல்லாதவர்கள் மட்டும் இதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்

இது தனிப்பட்ட கூட்டுப்பிரார்த்தனை அல்ல ஒட்டு மொத்த மனித இனத்திற்கான கூட்டுப்பிரார்த்தனை. அனைவரும் ஒன்றிணைந்து மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஸ்லோகம் பஞ்சாட்சர மந்திரமான ஓம் நமச்சிவாய தன்வந்திரி ஸ்லோகம் உயிர்காக்கும் அனைத்து மந்திரங்களையும் இணைந்து சொல்லுங்கள் எதுவுமே தெரியவில்லையா எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று சொல்லுங்கள் நற்பவி நற்பவி நற்பவி என்று சொல்லுங்கள் கொரோனோ வைரஸ் இந்த உலகத்தை விட்டே ஒழியட்டும் என்று நினையுங்கள் எழுதுங்கள் சொல்லுங்கள் படியுங்கள் பொதுவாகவே குழந்தைகள் தெய்வங்களுக்கு சமமானவர்கள் அவர்களிடம் சொல்லி சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி அல்லது பால்ய வயதில் இருக்கக்கூடிய குழந்தைகளாக இருந்தாலும் சரி உங்களின் குழந்தைகள் அனைவருமே இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள சொல்லுங்கள் கூட்டுப்பிரார்த்தனை என்பது ஒன்றும் அல்ல நாம் அனைவரும் அந்த நிமிட நேரத்தில் ஒன்றிணைந்து கேட்கப்படும் வேண்டுதலுக்கு கண்டிப்பாக நமக்கு மேல் இருக்கக் கூடிய ஒரு தெய்வீக ஆற்றல் வாய்ந்த சக்தி செவிசாய்க்கும்

எனவே இன்று முதல் இரவு 9 மணியிலிருந்து ஒரு ஐந்து நிமிடம் உலக மக்களின் நன்மைக்காக அனைவரும் உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அந்த மந்திர உச்சாடனம் செய்யலாம் அல்லது உலகம் நன்றாக இருக்க வேண்டும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் கொரோனோ வைரஸ் என்ற இந்த தொற்றுநோய் ஒழியவேண்டும் இப்படி ஏதாவது ஒரு எண்ணத்தை அனைவரும் ஒரே மனதுடன் நம்பிக்கையுடன் சொல்லுங்கள் இந்த வைரசை விரட்டும் வரைக்கும் இந்த கூட்டுப்பிரார்த்தனை தொடர்ந்து ஒலிக்கட்டும் இந்த உலக மக்களின் நன்மைக்காக நாம் ஆரம்பித்திருக்கும் இந்த முகநூல் கூட்டுப்பிரார்த்தனை ஆனது இதை அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள் இந்த பதிவின் கீழ் உள்ள கமெண்ட்டால் நீங்கள் அந்த நேரத்தில் கூட பதிவிடலாம் அல்லது எந்த நேரம் வேண்டுமானாலும் பதிவிடலாம் எண்ணங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் தூய்மையாக இருக்கவேண்டும் நேர்மறையாக இருக்க வேண்டும் கண்டிப்பாக எதிர்மறையான எந்த எண்ணமும் வந்துவிடக்கூடாது அதுமட்டுமல்லாமல் உங்கள் சுயம் சார்ந்த விஷயங்களை இதில் பதிவிட வேண்டாம் அது நம்முடைய உன்னதமான நோக்கத்தை மாற்றிவிடக் கூடிய விஷயத்தை தருவதாக இருக்கும்

எனவே அனைவரும் உலக மக்களின் நன்மைக்காகவும் இந்த வைரஸ் என்ற நோய் தீரும் வரை இந்த பதிவில் கீழே கமெண்டில் உங்களுக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் உச்சாடனம் செய்யுங்கள் இது ஒரு யாகம் போன்றது ஹோமம் போன்றது டைம் லைனில் தேட முடியவில்லை என்றாலும் அடிக்கடி இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு நீங்கள் உங்களுடைய டைம்லைனில் கூட எழுதலாம் தொடர்ந்து நாம் இதில் இயங்க இயங்க கண்டிப்பாக இந்த வைரஸ் முற்றிலும் நம்மை விட்டு அகலும் அதற்குரிய மருந்தும் கண்டுபிடிக்கப்படும் உலக மக்கள் அனைவரும் காப்பாற்றப்படுவார்கள் இது மற்ற நாட்டுக்கு வந்தது என்ற ஒரு அஜாக்கிரதை ஒரு அலட்சியப் போக்கினால் தான் இதை கண்டுகொள்ளாமல் விட்டதால் தான் இது பரவிக்கொண்டிருக்கிறது மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் அரசு உங்களுக்காக கூறும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுங்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்ற வேண்டியதில்லை நமக்குத் தெரிந்த யாருக்கேனும் இந்த நோய் வந்தாலும் உடனே அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அல்லது மருத்துவமனைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுங்கள்.ஓம் நமசிவாய

ஜோதிடர் பிரேம் சந்த் நம்பிராஜன் சென்னை 7708873905

ஜோதிடர் முகவரி

About Author

error: Content is protected !!