April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் கேசவ் தேசிராஜா காலமானார்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் மத்திய சுகாதார துறை செயலளருமான கேசவ் தேசிராஜா சென்னையில் காலமானார்.

முன்னாள் மத்திய சுகாதார துறை செயலாளரான இவர் இதய கோளாறு காரணமாக ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.

சென்னையில் பிறந்த கேசவ் தேசிராஜா, தொடக்க கல்வியை டேராடூனிலும், உயர்கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.

இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற கேசவ், மத்திய சுகாதார துறை செயலாளராக பதவி வகித்துள்ளார்.

மனநல சுகாதார சட்டம் கொண்டு வருவதற்கு காரணமாகவும், மன சுகாதார திட்ட நிலை குழுவில் கேசவ் தேசிராஜா உறுப்பினராக இருந்துள்ளார். அடையாறு புற்றுநோய் மையத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

About Author

error: Content is protected !!