May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முனுசாமிக்கு “ஜெ”மனோஜ் பாண்டியனு க்கு கல்தா

துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.பி. முனுசாமிக்கு ராஜ்யசபா சீட் கிடைத்ததால், மற்றொரு ஆதரவாளரான மனோஜ்பாண்டியன் அப்செட்டில் உள்ளார்.

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுபவர்கள் யார் என எதிர்பார்த்த நிலையில் முன்னாளர் துணை சபாநாயகர் தம்பிதுரை, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைபாளர் கே.பி. முனுசாமி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

முதல்வர் இ.பி.எஸ். ஆதரவாளரான தம்பிதுரை, கடந்த லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்ததால், தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.பி. முனுசாமியும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். அவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்றொரு ஆதரவாளரும், மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மகனும் முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான மனோஜ்பாண்டியன் தனக்கு சீட் கிடைக்காததால் அப்செட்டில் உள்ளார். இவரும் கடந்த லோக்சபா தேர்தலில் நெல்லையில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தவர் ஆவார்.இந்த முறை தேர்தலை சந்திக்காமல் எளிதல் பாராளுமன்றம் சென்று விடலாம் என காத்திருந்த மனோஜ்பாண்டியனுக்கு இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது

About Author

error: Content is protected !!