February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மினிமம் பேலன்ஸ் வேண்டாம் வாடிக்கையாளர்கள் குஷி

எஸ்பிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என அந்த வங்கி தலைவர் ரஜ்னீஸ்குமார் அறிவித்துள்ளார்.எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்குகளை வாடிக்கையாளர்கள் பராமரித்து வருகின்றனர். இது பெருநகரங்களில் ரூ.5 ஆயிரமாகவும், மற்ற பகுதிகளில் ரூ.3 ஆயிரமாகவும் இருந்தது. குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியம் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நடுத்தர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகும் மாதந்திர பென்ஷன் எடுப்போர், தனியார் நிறுவங்களின் மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பீடி தொழிலாளர்கள்,நூறு நாள் வேலை திட்டம் செல்வோர் என நடுத்தர வகுப்பினர் பலன் பெற வாய்ப்பு உள்ளது

About Author

error: Content is protected !!