June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டம்நெம்மேலியில் முதல்வர் விழாவுக்கு சட்டவிரோதமாக பேனர் வைத்த வழக்கில் அதிமுக மாவட்டச்செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகம் மற்றும் குமாரவேல் உள்ளிட்டோர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இரு நாட்களுக்கு முன்பு கடல்நீரை குடிநீராக்கும் திட்ட துவக்க விழாவுக்காக சாலையில் விதிமீறி பேனர்கள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மாவட்ட வருவாய்த்துறையினர் அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய தனராஜ் மற்றும் கண்ணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்திரவு

கோவைமேட்டுப்பாளையத்தில் அரிவாளால் வெட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வர்ஷினி பிரியாவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்
கோவையில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை நூதன முறையில் மோசடி செய்து விற்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. துணை ஆணையர் பாலாஜி சரவணன் தலைமையிலான தனிப்படையினர் மோசடி கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
கிருஷ்ணகிரி
ஓசூர் தர்கா அருகே ஏரிக்கரையில் இருந்து 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த ஆணின் உடையில் இருந்து எடுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் காஞ்சிபுரத்தை சேர்ந்த கண்ணன்(31) என்பது தெரியவந்தது. இருவரது உடலையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கி
ஓசூர் தர்கா ஏரியில் அடையாளம் தெரியாத ஆண், பெண் உடல்கள் கண்டெடுப்பு போலீசார் விசாரணை

திருச்சிமாநகராட்சிக்கு சொந்தமான அரியமங்கலம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
5 குடிநீர் லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

சென்னைபோரூர் அருகே மதுரவாயல்-தாம்பரம் புறவழிச்சாலையில் கார் ஓன்று திடீரென தீ பற்றி எரிந்தது.
காரை ஒட்டி வந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் தீயை அணைத்தனர்.
நாகையில்இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை முற்றுகையிட்டு மாணவிகள் போராட்டம் நடத்தினர். இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்ற ஓ.எஸ்.மணியன் காரை 50க்கும் மேற்பட்ட மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீருவண்ணாமைலையில் மடிக்கணினி வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸ் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை
சீர்காழியில் மடிக்கணினி வழக்காததை கண்டித்து எம்எல்ஏ பாரதி காரை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்

கடலூரில் மடிக்கணினி வழங்கக்கோரி அமைச்சர் எம்.சி.சம்பத் காரை முன்னாள் மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மடிக்கணினி வழங்காததை கண்டித்து அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மாணவர்கள் முற்றுகையிட்டனர். சமாதான பேச்சுக்கு பின் கலைந்து சென்றனர்.

வேலூர்
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர பணிகள் தொடங்கின. ஜோலார்பேட்டை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்துவர பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. மேட்டுச்சக்கரக்குப்பம் நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது.

ஈரோடு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் பல்வேறு விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

கொங்கு மண்டலத்தில் உயர்மின் அழுத்த கோபுரத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் 6 எம்.பிக்கள் பங்கேற்ற கூட்டத்தில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் காட்சிகள் கட்சிகள், விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து திட்டத்தை தடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கெயில், ஐடிபிஎல் குழாய்களை சாலையோரங்களில் மட்டுமே பதிக்க அனுமதிக்க முடியும் என எம்.பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.துரைஅருகே குடிநீர் கேட்டு அமைச்சர் முற்றுகை – அமைச்சர் ஆர்.பி. உதய்டகுமாரிடம் கிராமமக்கள் வாக்குவாதம்

காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மர்ம மரணம்

தேனி
உத்தமபாளையம், புதூர் வார்டு 10 காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த உதயகுமார் அவர்கள் மகன் முத்தீஸ்வரன், மரத்தில் தூக்குபோட்டுத் தற்கொலை. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

தேனி மாவட்டத்தில்உள்ள 84 பள்ளிகளில் 12 ம் வகுப்புபயிலும் 9542 மாணவ – மாணவிகளுக்கு மடினி கனிணிகளை துணை முதல்வர் பன்னீர் செல்வம் வழங்கினார்

About Author

error: Content is protected !!