February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வட்டார வளமையத்தில் விழிப்புணர்வு பயிற்சி

கீழப்பாவூர்வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வழியாக கீழப்பாவூர் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சதீஷ் கிங்ஸ்லி தலைமை தாங்கினார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி. லதா அனைவரையும் வரவேற்று பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்
பயிற்சியில் மாற்றுத்திறன் குழந்தைகளின் சாதனைகள் அடங்கிய காணொலிக்காட்சி இப்பள்ளி ஆயத்த பயிற்சி செயல்பாடுகள் ஆதாரவளமைய தசைப்பயிற்சி அடங்கிய புகைப்படங்கள் வீட்டு வழிக்கல்வி காணொலி போன்றவைகள் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் வளமையம் முலமாக அளிக்கப்படும் பயிற்சிக்கு பின் தங்கள் குழந்தைகளின் முன்னேற்ற செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.மாற்றுத்திறன் குழந்தை பிறக்கும் முன் அதை தடுப்பதற்கான விழிப்புணர்வு, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சட்டங்கள் மற்றும் அரசின் உதவி திட்டங்கள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உணவு முறைகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தொழிற்கல்வி குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில் 25 மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் . பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ,ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.ஆசிரியப்பயிற்றுநர் மு.ரெஜி நன்றி கூறினார்

About Author

error: Content is protected !!