March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

கடையநல்லூர் வட்டம். ஆயக்குடி குறு வட்டம், ஆயக்குடி கிராமம் அமர்சேவா சங்கத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அவர்களது தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தென்காசி பாராளுமன்ற தேர்தல் செலவின பார்வையாளர் திரு. கபில் மண்டல் .I.R.S அவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவில் அதிகளவு பங்கெடுத்து கொள்ள வேண்டியதன் அவசியம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு பிரத்யோக வசதிகள் தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்படுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இம்முகாமில் VVPTன் பயன்பாடு மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை VVPT – மூலம் உறுதி செய்து கொள்ளப்படுவது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு ஒளிப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. திரு.மனோகரன் முதுநிலை வருவாய் ஆய்வாளர் என்பவரின் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நாட்டுப்புறப் பாடல்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.மேலும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமர் சேவா சங்க நிறுவனர் இராமகிருஷ்ணன் மற்றும் செயலாளர் சங்கர் ராமன் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் முத்து கிருஷ்ணன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 200 மாற்றுத்திறனாளிகள் . பொதுமக்கள் . வட்டாட்சியர் .மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர். கிராம நிர்வாக அலுவலர் ஆயக்குடி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!